Anbu Manam Kanintha
Aalukkoru Veedu
Hero Sathiyan
Music Director Viswanathan Ramamurthy
Lyricist Pattukottai Kalyanasundaram
Singers P.Suseela,P.B.Sreenivas
Year 1960
Song Lyrics

அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா

அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா

அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமா

அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா


மாலை வெயில் மயக்கத்திலே மறந்திடலாமோ

மனைவி என்றே ஆகும் முன்னே நெருங்கிடலாமோ

உறவானது மனதில் மணமானது நினைவில் இதை

மாற்றுவதார் மானே வையகம் மீதில் - ( அஞ்சு )


காதலுக்கே உலகம் என்று கனவு கண்டேனே

நான் கனவில் கண்ட காட்சி எல்லாம்

கண்ணில் கண்டேனே

இது காவிய கனவு

இல்லை காரிய கனவு

புது வாழ்வினிலே தோன்றும் மங்கலக் கனவு


அன்பு மனம் துணிந்து விட்டால் அச்சம் தோணுமா

ஆவலை வெளியிட வெகு நேரம் வேணுமா

இரு குரல் கலந்து விட்டால் இன்ப கீதமே

இன்னமுத வீணையும் அறியாத நாதமே.

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY