Anbum Arivum Aasaiyum

Hero | Sathiyan |
Music Director | Viswanathan Ramamurthy |
Lyricist | Pattukottai Kalyanasundaram |
Singers | L.R.Eswari,K.Jamunarani |
Year | 1960 |
Song Lyrics
அன்பும் அறிவும் ஆசையும்
நெறைஞ்ச ஐயா வாழ்க வாழ்க
அம்பது வருஷம் இவரைச்
சுமந்த அன்னை பூமி வாழ்க (அன்பும்)
சின்னக் குழந்தையைப்போலே துள்ளி விளையாடும்
குணம் வாழ்க ஐயா குணம் வாழ்க - ஒரு
தினை அளவுகூட சுயநலமில்லாத
மனம் வாழ்க ஐயா மனம் வாழ்க (அன்பும்)
காசு பணங்களை கைதிகளாக்கிய
கை வாழ்க ஐயா கை வாழ்க!
காலந் தெரிஞ்சு அதை விடுதலை செய்த
பை வாழ்க ஐயா பை வாழ்க (அன்பும்)
அளவுக்கு மீறி சேர்த்து வைப்பதால்
ஆபத்து வருமென்றே
அள்ளி அள்ளியே வழங்குகின்றாரிவர்
வள்ளல் வழி நின்றே-
இமய மலையும் இவரும் ஒன்றே (அன்பும்)

COMPILED AND UPDATED BY