Oorukkellam Ore Sami

Hero | Sathiyan |
Music Director | Viswanathan Ramamurthy |
Lyricist | Pattukottai Kalyanasundaram |
Singers | L.R.Eswari,K.Jamunarani |
Year | 1960 |
Song Lyrics
ஊருக்கெல்லாம் ஒரே சாமி ஒரே சாமி
ஒரே நீதி ஒரே நீதி ஒரே ஜாதி கேளடி கண்ணாத்தா
மூச்சுக்கெல்லாம் ஒரே காத்து ஒரேகாத்து
ஒரே தண்ணி ஒரே வானம் ஒரே பூமி
ஆமடி பொன்னாத்தா! (ஊருக்)
எல்லோருக்கும் உலகம் ஒண்ணு
இருளும் ஒண்ணு ஒளியும் ஒண்ணு
இன்னும் சொன்னா நீயும் ஒண்ணு
நானும் ஒண்ணே தானே
யாரு மேலே கீறினாலும்
ரத்தம் ஒண்ணு தானே
ஆக மொத்தம் பிறந்ததெல்லாம்
பத்தாம் மாதம் தானே
உயிருக்கெல்லாம் ஒரே பாதை ஒரேபாதை
ஒரே வாசல் ஒரே கூடு ஒரே ஆவி
பாரடி கண்ணாத்தா
பாடுபட்டோர் கொஞ்சமில்லே
பலன் வெளைஞ்சா பஞ்சமில்லே
ஆடும் மாடும் நாமும் வாழ
அருள் புரிவாளே-அம்மா அருள் புரிவாளே
அங்காளம்மன் கோவிலுக்குப்
பொங்க வைக்க வேணும்
அன்னையவள் எங்களையும்
பொங்க வைக்க வேணும்

COMPILED AND UPDATED BY