Hero | Raghuvaran |
Music Director | Chandrabose |
Lyricist | Mu.Metha |
Singers | Malasiya Vasudevan |
Year | 1988 |
போடு போடு என்று சொன்னால் மயில் இறகு போடுமா
பொங்கி வந்த புலிகள் இன்னும் பொறுக்க முடியுமா
உயர வைத்த ஏணிகளே நம்மை உதைத்தவரை விடலாமா
உழைத்து வாழும் ஏழைகளே நாம் உரிமை கேட்டு தொழலாமா

பொங்கி வந்த புலிகள் இன்னும் பொறுக்க முடியுமா...
கை ராட்டை சுற்றியவர் நாட்டை ஆள்கிறார்
கை நாட்டு போட்டவரோ ரோட்டில் வாழ்கிறார்
மேடைகளில் பொய்களுக்கு நல்ல விற்பனை
மக்கள் இங்கு கண்டதெல்லாம் கனவு கற்பனை
காந்தி போன பாதை மீது கரை படிந்தது
கண்ணகியின் கற்பில் கூட திரை விழுந்தது
போடு போடு என்று சொன்னால் மயில் இறகு போடுமா
பொங்கி வந்த புலிகள் இன்னும் பொறுக்க முடியுமா..
உயர வைத்த ஏணிகளே நம்மை உதைத்தவரை விடலாமா
உழைத்து வாழும் ஏழைகளே நாம் உரிமை கேட்டு தொழலாமா
போடு போடு என்று சொன்னால் மயில் இறகு போடுமா
பொங்கி வந்த புலிகள் இன்னும் பொறுக்க முடியுமா...
கேள்வி மீது கேள்வி கேட்கும் வேள்வி போதுமா
கிழக்கு வானம் சிவக்க ரத்தம் பூச வேண்டுமா
தேசமன்று வெள்ளைக்காரர் தமது கையிலே
இன்று இந்த கொள்ளைக்காரர் சட்டை பையிலே
பூட்டியுள்ள கதவுகளை திறக்க சொல்லுவோம்
திறக்கவில்லை என்று சொன்னால் உடைத்து தள்ளுவோம்
போடு போடு என்று சொன்னால் மயில் இறகு போடுமா
பொங்கி வந்த புலிகள் இன்னும் பொறுக்க முடியுமா
உயர வைத்த ஏணிகளே நம்மை உதைத்தவரை விடலாமா
உழைத்து வாழும் ஏழைகளே நாம் உரிமை கேட்டு தொழலாமா

COMPILED AND UPDATED BY