
Hero | Raghuvaran |
Music Director | Chandrabose |
Lyricist | Mu.Metha |
Singers | Malasiya Vasudevan |
Year | 1988 |
கோவையிலே கோனாரு மதுரையிலே மன்னாரு
சிங்கம் டா என் பேரு என் முன்னே நீ யாரு
நெனச்சா புடிப்பேன் புடிச்சா அடிப்பேன்
அடிச்சா ஜெயிப்பேன் நான் இங்கே
அவன்தான் புருஷன் இவன்தான் அரசன்
ஆனா மனுஷன் யார் இங்கே...ஹே ஹே
கோவையிலே கோனாரு மதுரையிலே மன்னாரு
சிங்கம் டா என் பேரு என் முன்னே நீ யாரு
கெட்டிக்காரனவன் சொல்லும் பொய் புளுகு
எட்டு நாளிலே வெளியாகும்
பட்டம் பதவிகளும் துட்டும் பெருமைகளும்
இங்கே அனைவருக்கும் பொதுவாகும்
ஒரு காலம் உருவாகும் உனக்கெல்லாம் பதிலாகும்
எதிர்காலம் எனதாகும்..ஓஓஓஓ....ஓஓஒஹ்
கோவையிலே கோனாரு மதுரையிலே மன்னாரு
சிங்கம் டா என் பேரு என் முன்னே நீ யாரு
அங்கே ஒரு விழியும் இங்கே ஒரு விழியும்
ஆசை வரும் வழியில் தடுமாற
எங்கள் இளங்கிளிகள் சொல்லும் கனிமொழியில்
பொங்கும் எரிமலைகள் இடமாற
மதயானை வந்தாலும் மடக்காமல் விடமாட்டோம்
மயக்கத்தில் விழமாட்டோம் ஓஓஓஓ....ஓஓஒஹ்
கோவையிலே கோனாரு மதுரையிலே மன்னாரு
சிங்கம் டா என் பேரு என் முன்னே நீ யாரு
நெனச்சா புடிப்பேன் புடிச்சா அடிப்பேன்
அடிச்சா ஜெயிப்பேன் நான் இங்கே
அவன்தான் புருஷன் இவன்தான் அரசன்
ஆனா மனுஷன் யார் இங்கே...ஹே ஹே
கோவையிலே கோனாரு மதுரையிலே மன்னாரு
சிங்கம் டா என் பேரு என் முன்னே நீ யாரு

COMPILED AND UPDATED BY