Ada Ennamma Summa
Kai Naattu
Hero Raghuvaran
Music Director Chandrabose
Lyricist Mu.Metha
Singers Malasiya Vasudevan,S.P.Shailaja
Year 1988
Song Lyrics

ஆண் : அட நீ என்னம்மா சும்மா நில்லம்மா
என் வீக்னெஸ்ஸ புரிஞ்சுகிட்டம்மா
அட நீ என்னம்மா சும்மா நில்லம்மா
என் வீக்னெஸ்ஸ புரிஞ்சுகிட்டம்மா
மொறச்சு மொறச்சு பாக்குறே இடிச்சு இடிச்சு பேசுறே
சரியில்ல மொறையில்ல எனக்கு புடிக்கல

பெண் : அட நீ என்னய்யா சும்மா நில்லய்யா
உன் வீக்னெஸ்ஸ புரிஞ்சுகிட்டேன்யா
அட நீ என்னய்யா சும்மா நில்லய்யா
உன் வீக்னெஸ்ஸ புரிஞ்சுகிட்டேன்யா
கனவுலதான் சிரிக்கிறே எதுக்க வந்தா மொறைக்கிறே
சரியில்ல மொறையில்ல எனக்கு புடிக்கல..

ஆண் : அடடடடா....நீ என்னம்மா சும்மா நில்லம்மா
என் வீக்னெஸ்ஸ புரிஞ்சுகிட்டம்மா...

பெண் : பூமி இத ஆள வந்த புரட்சி தலைவரோ
நீ நாடறிந்த சிம்மக்குரல் நடிகர் திலகமோ
ஆண் : காதலுக்கு நாயகனாம் கமலஹாசன் நான்
மோதலுக்கு ரஜினி போல மொரட்டுக் காள நான்

பெண் : நதியா ராதிகா அமலா அம்பிகா
ராதா மாதிரி நான் மாறவா
ஆண் : நளினி ரஞ்சனி ஹங் சரிதா கெஞ்சு நீ
உன்னக் கண்டதும் நான் ஓடவா
பெண் : தடுப்பேன்...ஹோய்..இழுப்பேன்..ஹோய்..
ஆண் : தடுத்தா இழுத்தா தப்பு இல்லையா...

ஆண் : அட நீ என்னம்மா சும்மா நில்லம்மா
என் வீக்னெஸ்ஸ புரிஞ்சுகிட்டம்மா
பெண் : அட நீ என்னய்யா சும்மா நில்லய்யா
உன் வீக்னெஸ்ஸ புரிஞ்சுகிட்டேன்யா

ஆண் : பச தடவி போஸ்டர் ஒட்டி பழகி போனவன்
பசையில்லாம எங்கிட்ட நீ எதுக்கு ஓட்டுறே
பெண் : பச தடவி ஒட்டுனாலும் கிழிச்சு போடுறான்
பாசத்துல ஒட்ட வந்தேன் மனச பாத்தியா

ஆண் : சுவரா மாறினா தவறா போகுமே
அதுதான் கொஞ்சம் நான் யோசிக்கிறேன்
பெண் : பாரா பாக்குறேன் மனுஷன் முகத்த நான்
நேரா பாத்துதான் வாசிக்கிறேன்
ஆண் : படிச்சா..ஹோய் ஹோய் முடிச்சா ஹோய்
பெண் : படிச்சி முடிச்சா பாவம் என்னய்யா

பெண் : அட நீ என்னய்யா சும்மா நில்லய்யா
உன் வீக்னெஸ்ஸ புரிஞ்சுகிட்டேன்யா
ஆண் : அட நீ என்னம்மா சும்மா நில்லம்மா
என் வீக்னெஸ்ஸ புரிஞ்சுகிட்டம்மா

பெண் : கனவுலதான் சிரிக்கிறே
எதுக்க வந்தா மொறைக்கிறே
ஆண் : சரியில்ல மொறையில்ல எனக்கு புடிக்கல
பெண் : அட நீ என்னய்யா சும்மா நில்லய்யா
உன் வீக்னெஸ்ஸ புரிஞ்சுகிட்டேன்யா....ஆமாமாம்...

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY