Kukkukkoo Ena Koovum
Kaalaiyum Neeye Maalaiyum Neeye
Hero Vijayakanth Prabhu & Pandiyan
Music Director Devandran
Lyricist Vali
Singers SP. Balasubramaniam,S.Janaki
Year 1988
Song Lyrics

பெண் : குக்குக்கூ ...
குக்குக்கூ என கூவும் குயிலோசை
தித்திக்கும் என் கண்ணன் குழலோசை
நாளும் நாளும் கேட்டு என் தேகம் வாடினேன்
காதல் ராதை நானும் குயிலாக பாடினேன்
கூடும் காலம் சேரும் நேரம்
எங்கே என்று நினைந்து நினைந்து

ஆண் : குக்குக்கூ என கூவும் குயிலோசை
நாளும் நாளும் கேட்டால் உன் தேகம் வாடுமோ
காதல் ராதை பாடும் குயிலோசை கேட்குமோ
கூடும் காலம் சேரும் நேரம்
எங்கே என்று நினைந்து நினைந்து
பெண் : குக்குக்கூ என கூவும் குயிலோசை

பெண் : உன்னோடு நான் சேர உறக்கமில்லை
கண்ணா என் மேல் ஏனோ இரக்கமில்லை
உன்னோடு நான் சேர உறக்கமில்லை
கண்ணா என் மேல் ஏனோ இரக்கமில்லை

ஆண் : பள்ளியறைக்கு பூஜை நான் போடவா
அள்ளி அணைக்க அன்பே என் கூடவா
பெண் : உள்ளவரைக்கும் அள்ளி வழங்கு
வெள்ளம் அணை தாண்டாது விட்டுவிட கூடாது
குக்குக்கூ என கூவும் குயிலோசை

ஆண் : ஆ ஆ ஆ பெண் : ஆ ஆ ஆ
ஆண் : ஆ ஆ ஆஹா ஆஹா பெண் : ஆ ஆ ஆ ஆ

ஆண் : நிலவுக்கு நீ என்ன இளையவளோ
என் நெலவரம் தெரியாத புதியவளோ
நிலவுக்கு நீ என்ன இளையவளோ
என் நெலவரம் தெரியாத புதியவளோ

பெண் : தலைவனை நான் நெஞ்சில் தாலாட்டுவேன்
தனியிடத்தில் உன்னை பாராட்டுவேன்
ஆண் : கொட்டும் அருவி..தொட்டு தழுவி..
பட்ட இடத்தில் இன்று..கட்டி அணைத்தே பாடும்

ஆண் : குக்குக்கூ என கூவும் குயிலோசை
பெண் : தித்திக்கும் என் கண்ணன் குழலோசை
ஆண் : நாளும் நாளும் கேட்டால் உன் தேகம் வாடுமோ
காதல் ராதை பாடும் குயிலோசை கேட்குமோ

பெண் : கூடும் காலம் சேரும் நேரம்
எங்கே என்று நினைந்து நினைந்து
குக்குக்கூ என கூவும் குயிலோசை
ஆண் : தித்திக்கும் உன் கண்ணன் குழலோசை

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY