Hero Vanthachudi unnai
Jeeva
Hero Sathyaraj Nizhalkal Ravi
Music Director Gangai Amaran
Lyricist Pulamai Pithan
Singers SP. Balasubramaniam,K.S.Chitra
Year 1988
Song Lyrics

ஆண் : ஹீரோ வந்தாச்சுடி உன்னைத் தேடியே
கோபம் கொள்ளாதடி ரதி தேவியே
ஆஹா இது ஒரு காவிய காதல்
ஏனம்மா இப்படி மோதல் வாடி யம்மா யம்மா
உன் மேலே சும்மா சும்மா ஹ

பெண் : ஹீரோ இப்போதுதான் வரவேணுமா
மாலை கையோடு நான் தர வேணுமா

பெண் :ஏய்யா முறைக்கிற சாமி உன் வீரம் எங்கே காமி
ஆண் : ஏம்மா குதிக்கிற வீணா நீ மீசை இல்லாத ஆணா
பெண் ; வீராப்பு வேணாம் ஆண் பிள்ளையானா நெருங்கு
ஆண் : ஹே ஆத்தாடி மானே அதுக்காக தானே குறும்பு

பெண் : உன்னை சோதிக்கப் போறவ நானே
இதில் தோற்ப்பது நிச்சியம் நீயே
ஆண் : நான் ஆறடி ஆளடி மானே
என்னை யாருன்னு காட்டுறேன் நானே

பெண் : ஹீரோ இப்போதுதான் வரவேணுமா யெஸ் யெஸ்
மாலை கையோடு நான் தரவேணுமா ஹ ஹ
பெண் : ஆஹா இது ஒரு காகித காதல்
வேணாய்யா ஒரு டூயட் பாடல்
போதும் யம்மா யம்மா இந்த காதல் சும்மா சும்மா
ஆண் : ஹீரோ வந்தாச்சுடி உன்னைத் தேடியே
கோபம் கொள்ளாதடி ரதி தேவியே

ஆண் : வேணாம் கலவரம் வேணா
நல்ல நேரம் போச்சே வீணா
பெண் : வா வா சமரச பேச்சா
உன் வீரம் தீரம் போச்சா
ஆண் : பொண்ணுக்கு முன்னே நடக்காது கண்ணே
சரணம் யம்மா சரணம்

பெண் : சொல்லாமல் நாளும்
ஒழுங்காக நீயும் வரணும் வரணும்

ஆண் : ரொம்ப ஹீட்டுல வாடுது தேகம்
வந்து தோளிலே சாஞ்சுக்க வேணும்
பெண் : இது மார்கழி மாதத்து காத்து
உன் வாலிப போர்வையை போத்து

ஆண் : ஹீரோ வந்தாச்சுடி உன்னைத் தேடியே ஆஹா
கோபம் கொள்ளாதடி ரதி தேவியே ஆஹா
ஆஹா இது ஒரு காவிய காதல்
பாடம்மா டூயட் பாடல் வாடி யம்மா யம்மா
இனி மேலே கும்மா கும்மா ஹ
லல லல்ல லா ஹ ஹ லல லல்ல லா ஹ ஹ

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY