Kanniyaval Naanukiral
Thanga Kalasam
Hero Pandiyan
Music Director M.S.Viswanathan
Lyricist London Gopal
Singers K.J.Jesudass,K.S.Chitra
Year 1988
Song Lyrics

ஆண் : கன்னியவள் நாணுகிறாள்
காதலன் கைத் தொடவே
கன்னியவள் நாணுகிறாள்
காதலன் கைத் தொடவே

வண்ணத் தேன் மலரானாள்
இன்னமுதம் இதழ் பருக
வண்ணத் தேன் மலரானாள்
இன்னமுதம் இதழ் பருக
கன்னியவள் நாணுகிறாள்
காதலன் கைத் தொடவே.....

பெண் : எண்ணலைகள் கோடி பெற
மன்னவனின் மார்பினிலே
எண்ணலைகள் கோடி பெற
மன்னவனின் மார்பினிலே

விண்ணுலகை காணுகிறாள்
கண்ணயர்ந்து கால் தளர
கண்ணயர்ந்து கால் தளர....
கன்னியவள் நாணுகிறாள்
காதலன் கைத் தொடவே.....

ஆண் : தான் அடைந்த காதலனின்
தேனிதழக்கு ஏங்குகிறாள்
தான் அடைந்த காதலனின்
தேனிதழக்கு ஏங்குகிறாள்

பெண் : தேன் அது தெவிட்டிடுமோ
தெள்ளமுதம் தீதாமோ
தெள்ளமுதம் தீதாமோ
கன்னியவள் நாணுகிறாள்
காதலன் கைத் தொடவே.....

ஆண் : பனிக் கரைந்த இன்ப மழை
பன்னீரில் நீந்துகிறாள்
பனிக் கரைந்த இன்ப மழை
பன்னீரில் நீந்துகிறாள்
புனிதமிகு காதலிலே புத்தின்பம் காணுகிறாள்
புத்தின்பம் காணுகிறாள்

இருவரும் : கன்னியவள் நாணுகிறாள்
காதலன் கைத் தொடவே
வண்ணத் தேன் மலரானாள்
இன்னமுதம் இதழ் பருக
கன்னியவள் நாணுகிறாள்
காதலன் கைத் தொடவே.....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY