Sree Ranjani En
Thambi Thanga Kambi
Hero Vijayakanth
Music Director Gangai Amaran
Lyricist Vali
Singers K.J.Jesudass,K.S.Chitra
Year 1988
Song Lyrics

ஆண் : ஸ்ரீ ரஞ்சனி என் சிவரஞ்சனி
பெண் : இந்த தேமாங்கனி உன் மடிமேல் இனி
ஆண் : அடி நீர் மோகினி எந்தன் தேவதேவி நீ
பெண் : உன் சிந்தாமணி வண்ண மீனலோச்சனி
ஆண் : கண்ணே வா நீ ....ஸ்ரீ ரஞ்சனி என் சிவரஞ்சனி

பெண் : ஆசை நீரோடைதான்
கண்ணா நீ ஆழம் காணாதாதோ
ஆண் : ஈரம் காயாமலே எப்போதும் பூமி நீராடுதோ
பெண் : சொன்னதில் ஏதேதோ அர்த்தம் இருக்கு
இத்துடன் போதாதோ தர்க்கம் எதற்கு

ஆண் : வண்ண மீன் போலே நான் வட்டம் அடிப்பேன்
மெல்லிடை நோகாமல் மெல்ல கடிப்பேன்
பெண் : அங்கும் இங்கும் தீண்டும் போது ஆசை தூண்டும்
ஆண் : ஸ்ரீ ரஞ்சனி என் சிவரஞ்சனி

ஆண் : வானில் மேகாலயம் இங்கே நம்
வாழ்வின் வைபோகமோ
பெண் : காணும் சந்ரோதயம் இங்கே தான்
காதல் ராஜாங்கமோ

ஆண் : கட்டிய பூமாலை நட்சத்திரமோ
கண்மணி நீ சூடும் முத்துச்சரமோ
பெண் : மின்னல்கள் கல்யாண பந்தலிடுமோ
வானவில் பொன்னுஞ்சல் கற்று தருமோ
ஆண் : மண்ணுலகில் ஏது இந்த தேவலோகம்

ஆண் : ஸ்ரீ ரஞ்சனி என் சிவரஞ்சனி
பெண் : இந்த தேமாங்கனி உன் மடிமேல் இனி
ஆண் : அடி நீர் மோகினி எந்தன் தேவதேவி நீ
பெண் : உன் சிந்தாமணி வண்ண மீனலோச்சனி
ஆண் : கண்ணே வா நீ....ஸ்ரீ ரஞ்சனி என் சிவரஞ்சனி....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY