
Hero | Vijayakanth |
Music Director | Gangai Amaran |
Lyricist | Muthulingam |
Singers | SP. Balasubramaniam |
Year | 1988 |
நான் என்றும் உன்னை விடமாட்டேன்
பொய்மைக்கு மாலையிட மாட்டேன்
ஏமாற்றும் எண்ணம் கொள்ளாதே நீயே
காலங்கள் நாளை மாறும்போது
தப்பிக்க பாதை இங்கு ஏது
உன் ஜம்பம் செல்லாது...ஹாஹ்ஹ்ஹ..
நான் என்றும் உன்னை விடமாட்டேன்
பொய்மைக்கு மாலையிட மாட்டேன்..யாஹ்...
நான் பாடும் நேரம் வந்தது உண்மைதனை
நாம் தேடும் நாளும் வந்தது
எந்நாளும் வெற்றி என்பது பூமிதனில்
என் வாழ்க்கை பாதை ஆனது
நீதியை நாளுமே போற்றுகின்ற நெஞ்சம்
தெய்வம் வாழும் கோயில் ஆகுமே
நேர்மையை காற்றிலே தூற்றுகின்ற நெஞ்சம்
முள்ளில் செய்த வேலியாகுமே..ஹாஹ்...
குள்ளநரிக் கூட்டமிங்கு ஆடுகின்ற ஆட்டம் கண்டு
வேட்டு வைக்கும் சிங்கம் நானடா..ஹாஹ்....
நான் என்றும் உன்னை விடமாட்டேன்..ஹஹ்ஹா..
பொய்மைக்கு மாலையிட மாட்டேன்..யாஹ்...
ஆனந்த கங்கை பொங்குது கூவம் வந்து
அதில் சேர்ந்து குற்றம் சொல்லுது
எப்போதும் உண்மை என்பது யார் மறைத்தும்
மணம் வீசும் பூவைப் போன்றது
ஊரிலே நாமெல்லாம் ஒன்று கூடும்போது
நம்மை வெல்லும் சக்தி இல்லையே
தேனிலே நஞ்சினை சேர்த்து இங்கு ஊட்டும்
தீய நெஞ்சம் வாழ்வதில்லையே..ஹோய்...
நேற்றிருந்தோர் இன்று இல்லை
இன்றிருப்போர் நாளை இல்லை
வாழ்வில் காணும் உண்மை தானடா
நான் என்றும் உன்னை விடமாட்டேன்
பொய்மைக்கு மாலையிட மாட்டேன்
ஏமாற்றும் எண்ணம் கொள்ளாதே நீயே
காலங்கள் நாளை மாறும்போது
தப்பிக்க பாதை இங்கு ஏது
உன் ஜம்பம் செல்லாது...யஹாஹ்....

COMPILED AND UPDATED BY