Vaaikka Varappukkulla
Thaimel Aanai
Hero Arjun
Music Director Chandrabose
Lyricist Vairamuthu
Singers Malasiya Vasudevan,S.P.Shailaja
Year 1988
Song Lyrics

ஆண் :வாய்க்கா வரப்புக்குள்ள வயசுப் புள்ள
ஒதுங்கி ஒதுங்கி போகுது
மச்சான் வரவ கண்டு சின்னப் பொண்ணு
பதுங்கி பதுங்கி போகுது

அடி பாக்கு மாத்தும் முன்னே
கொஞ்சம் பழகி பார்க்கலாமா
அட பந்தி போடும் முன்னே
நம்ம பசிய தீக்கலாமா...

பெண் :வாய்க்கா வரப்புக்குள்ள
வயசுப்புள்ள ஒதுங்கி ஒதுங்கி போகுது
மச்சான் வரவ கண்டு சின்ன
பொண்ணு பதுங்கி பதுங்கி போகுது

அந்த பாக்கு மாத்தும் முன்னே
நீ பழகி பார்க்கலாமா
அட பந்தி போடும் முன்னே
நீ பசிய தீக்கலாமா.....
ஆண் :வாய்க்கா வரப்புக்குள்ள வயசுப்புள்ள
ஒதுங்கி ஒதுங்கி போகு..து

ஆண் : ஆடியிலே சமஞ்சவளே
அம்சமெல்லாம் அமஞ்சவளே
கொண்டைக்கு பூ வாங்கி வாறே...ன்

பெண் : ஜில்லாவ ஜெயிச்சவரே
சேலையெல்லாம் தொவச்சவரே..
தாலிக்கு பின்னாலே தாறே..ன்

ஆண் :எங்கிட்ட தீண்டாதே
நான் உன்ன விடமாட்டேன்
பெண் :வாய்விட்டு கேட்டாலும்
பாய் மட்டும் தரமாட்டேன்
ஆண் :முந்தானை பாயாகும் வா வா

பெண் :வாய்க்கா வரப்புக்குள்ள
வயசுப்புள்ள ஒதுங்கி ஒதுங்கி போகுது
ஆண் : மச்சான் வரவ கண்டு சின்ன
பொண்ணு பதுங்கி பதுங்கி போகுது

பெண் : எழுத்தாணி மூக்கழகா
இளந்தாதி பல்லழகா
என் கிட்ட ஆட்டாத வால
ஆண் : விளையாத தேன் கனியே
வளையாத பூங்கொடியே
என் கிட்ட காட்டாத வேல

பெண் : கட்டில் மேல் இப்போதும்
பெண்ணுக்கே ஆதிக்கம்...ஹே ஹே
ஆண் : ஆனாலும் எப்போதும்
ஆண் வர்க்கம் சாதிக்கும்
பெண் : இன்பங்கள் சரிபங்கு வா வா

ஆண் : வாய்க்கா வரப்புக்குள்ள
வயசுப்புள்ள ஒதுங்கி ஒதுங்கி போகுது
பெண் : மச்சான் வரவ கண்டு சின்ன
பொண்ணு பதுங்கி பதுங்கி போகுது

ஆண் : அடி பாக்கு மாத்தும் முன்னே
கொஞ்சம் பழகி பார்க்கலாமா ஆ
பெண் : அட பந்தி போடும் முன்னே
நீ பசிய தீக்கலாமா

ஆண் : வாய்க்கா வரப்புக்குள்ள
வயசுப்புள்ள ஒதுங்கி ஒதுங்கி போகுது
பெண் : மச்சான் வரவ கண்டு சின்ன
பொண்ணு பதுங்கி பதுங்கி போகுது....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY