Chinna Kanna Chella Kanna
Song Lyrics

சின்ன கண்ணா செல்லக் கண்ணா சொந்தம் என்ன சொந்தம்
ஏழு ஜென்மம் போன பின்னும் வாழும் இந்த பந்தம்
தாய் மடியில் ஓய்வெடுக்கும் காலம் நிம்மதி
தலையெடுத்து வளர்ந்து விட்டால் இன்பம் துன்பம் பாதி

சின்ன கண்ணா செல்லக் கண்ணா சொந்தம் என்ன சொந்தம்
ஏழு ஜென்மம் போன பின்னும் வாழும் இந்த பந்தம்

மார்பணைத்து ஊட்டவில்லை நீயும் பிள்ளைதான்
மணி வயிற்றில் சுமக்கவில்லை நானுன் அன்னைதான்
இனி ஒருநாள் ஈன்றெடுப்பேன் நானுன் அன்னையாவேன்
இல்லையென்றால் பிறந்திருப்பேன் நானுன் பிள்ளையாவேன்

சின்ன கண்ணா செல்லக் கண்ணா சொந்தம் என்ன சொந்தம்
ஏழு ஜென்மம் போன பின்னும் வாழும் இந்த பந்தம்

மானம் ஒன்றே வாழ்க்கையென்றே மண்ணை ஆள வா
வீரம் ஒன்றே வேதமென்றே விண்ணை சாடி வா
யார் மகன் நீ என்பதை தான் ஊரும் சொல்ல வேண்டும்
பிறந்த உடல் மறைந்த பின்னும் பேரும் சொல்ல வேண்டும்

சின்ன கண்ணா செல்லக் கண்ணா சொந்தம் என்ன சொந்தம்
ஏழு ஜென்மம் போன பின்னும் வாழும் இந்த பந்தம்
தாய் மடியில் ஓய்வெடுக்கும் காலம் நிம்மதி
தலையெடுத்து வளர்ந்து விட்டால் இன்பம் துன்பம் பாதி....
ம்ம்ம்ம்ம்ம்ம்......ம்ம்ம்ம்ம்ம்ம்.....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY