Sangu Chakkara Saami
Thaimel Aanai
Hero Arjun
Music Director Chandrabose
Lyricist Vairamuthu
Singers Malasiya Vasudevan,S.P.Shailaja
Year 1988
Song Lyrics

ஆண் : புட்டியில கள்ளிருக்க பொரிச்சு வச்ச மீனிருக்க
சாராயம் கூடாதுன்னு சத்தியத்தில் நானிருக்கேன்
பேச்சு முத்து கடச் சரக்கு எம் பேரச் சொல்லி கூப்பிடுது
வாசனைய தூது விட்டு என்ன வா வா வான்னு கூப்பிடுது....

ஆண் : சங்கு சக்கர சாமி வந்து
ஜிங்கு ஜிங்குன்னு ஆடுமாம்
உலகம் மூணும் அளக்குமாம் அது
ஓங்கி வானம் பிளக்குமாம்

சங்கு சக்கர சாமி வந்து
ஜிங்கு ஜிங்குன்னு ஆடுமாம்
உலகம் மூணும் அளக்குமாம் அது
ஓங்கி வானம் பிளக்குமாம்

துள்ளி துள்ளி நடக்குமாம் மீன்
அள்ளி அள்ளிக் கொடுக்குமாம்
துள்ளி துள்ளி நடக்குமாம் மீன்
அள்ளி அள்ளிக் கொடுக்குமாம்
தாதிமிதிமி தகதிமிதிமி தரிகிடதோம்
தாதிமிதிமி தகதிமிதிமி தரிகிடதோம்

பெண் : சங்கு சக்கர சாமி வந்து
ஜிங்கு ஜிங்குன்னு ஆடுமாம்
உலகம் மூணும் அளக்குமாம் அது
ஓங்கி வானம் பிளக்குமாம்

துள்ளி துள்ளி நடக்குமாம் மீன்
அள்ளி அள்ளிக் கொடுக்குமாம்
துள்ளி துள்ளி நடக்குமாம் மீன்
அள்ளி அள்ளிக் கொடுக்குமாம்

ஆண் : வலைய நம்பி
ஒலைய வைக்கும் ஏழை ஜனங்களே
இனி வாழ்க்கையிலே தோல்வி இல்லை
நிமிர்ந்து நில்லுங்களேன்

பெண் : மீன் பிடிக்க விரித்த வலையில்
விழுந்த ஜனங்களே
நம்மள வாழ வைக்க ஒருத்தன் வந்தான்
வாழ்த்து சொல்லுங்களேன்

ஆண் : காலம் கூடும் எல்லார்க்கும் ஹோய்...
கட்டு மரமும் பூப்பூக்கும் ஹோய்..ஹோய்..
பெண் : கடலு தண்ணி எங்க பூமி ஹோய்...
காவல் காக்க வந்தான் சாமி ஏலேலோ...
ஏலேலோ... ஏலேலோ... ஏலேலோ...

ஆண் : சங்கு சக்கர சாமி வந்து
ஜிங்கு ஜிங்குன்னு ஆடுமாம்
பெண் : உலகம் மூணும் அளக்குமாம் அது
ஓங்கி வானம் பிளக்குமாம்

ஆண் : துள்ளி துள்ளி நடக்குமாம் மீன்
அள்ளி அள்ளிக் கொடுக்குமாம்
பெண் : துள்ளி துள்ளி நடக்குமாம் மீன்
அள்ளி அள்ளிக் கொடுக்குமாம்

ஆண் : கடலுக்குள்ளே தண்ணியிலே உப்பு வெளையுதா
உங்க கண்ணுக்குள்ள கண்ணீரில உப்பு வெளையுதா
பெண் : எங்களுக்கு பசி எடுத்தா கடலு கொடுக்குது
அந்த கடலுக்கொரு பசியெடுத்தா எங்கள தின்னுது

ஆண் : அள்ளிக் கொடுப்பா கடல் மாது
அச்சம் இனிமேல் ஆகாது
உன்ன பார்த்தா வீரம் பொறக்கும்
பெண் : எனக்கு கூட மீசை மொளைக்கும்
ஏலேலோ... ஏலேலோ... ஏலேலோ...

இருவரும் : சங்கு சக்கர சாமி வந்து
ஜிங்கு ஜிங்குன்னு ஆடுமாம்
உலகம் மூணும் அளக்குமாம் அது
ஓங்கி வானம் பிளக்குமாம்

துள்ளி துள்ளி நடக்குமாம் மீன்
அள்ளி அள்ளிக் கொடுக்குமாம்
துள்ளி துள்ளி நடக்குமாம் மீன்
அள்ளி அள்ளிக் கொடுக்குமாம்.....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY