Endha Kathai Solla
Thaimel Aanai
Hero Arjun
Music Director Chandrabose
Lyricist Vairamuthu
Singers SP. Balasubramaniam,M.S.Rajeswari,K.J.Jesudass
Year 1988
Song Lyrics

ஆண் : எந்த கதை சொல்ல நான் எந்த கதை சொல்ல
எந்த கதையும் தெரியாது சொந்த கதைதான் தெரியும்
எந்த கதை சொல்ல நான் எந்த கதை சொல்ல
எந்த கதையும் தெரியாது சொந்த கதைதான் தெரியும்

அதில் கண்ணீரோடு ரத்தம் கொஞ்சம் கலந்திருப்பது புரியும்
அதில் கண்ணீரோடு ரத்தம் கொஞ்சம் கலந்திருப்பது புரியும்
எந்த கதை சொல்ல நான் எந்த கதை சொல்ல
எந்த கதையும் தெரியாது சொந்த கதைதான் தெரியும்

கையில் அன்று ஒட்டிய ரத்தம்
கண்ணே இன்னும் காயவில்லை
கழுகை பிடித்து கழுத்தை திருகும்
கடமை இன்னும் ஓயவில்லை

பாதி கதை தெரியும் கண்ணே
மீதி கதை முடியவில்லை
முள்ளை முள்ளால் எடுப்பதன்றி
வேறு வழி தெரியவில்லை

ஆண் : முள்ளை முள்ளால் எடுப்பதாக
நீயும் முனைந்து ஓடுகிறாய்
கண்ணில் விழுந்த முள்ளை எடுக்க
கடப்பாரை தேடுகிறாய்

வேட்டை ஆடிய கழுகுக்கெல்லாம்
வேடன் உள்ளான் தண்டிக்க
வேடன் போல் நீ வேடமிட்டால்
சட்டம் உள்ளது கண்டிக்க
நாளை எதுவும் நடக்கும் அதிலும் நன்மை இருக்கும்
நாளை எதுவும் நடக்கும் அதிலும் நன்மை இருக்கும்

எந்த கதை சொல்ல நான் எந்த கதை சொல்ல
சொந்த கதையோ எந்த கதையோ எனக்குத்தானே புரியும்
ஒரு விடுகதையை விளங்கி கொண்டேன்
விடையும் எனக்கு தெரியும்
ஒரு விடுகதையை விளங்கி கொண்டேன்
விடையும் எனக்கு தெரியும்....

பெண் : இது கதையல்ல அங்கிள் இது கதையல்ல
இது கதையல்ல டாடி இது கதையல்ல
இது கதையல்ல அங்கிள் இது கதையல்ல
இது கதையல்ல டாடி இது கதையல்ல

விடுகதையா போடச் சொன்னேன்
பிறந்த நாளு எனக்கு
உங்கள் விடுகதையை விளங்கி கொள்ள
வயசு இல்லை எனக்கு
உங்கள் விடுகதையை விளங்கி கொள்ள
வயசு இல்லை எனக்கு

ஆண் : எந்த கதை சொல்ல நான் எந்த கதை சொல்ல
எந்த கதையும் தெரியாது சொந்த கதைதான் தெரியும்

அதில் கண்ணீரோடு ரத்தம் கொஞ்சம் கலந்திருப்பது புரியும்
அதில் கண்ணீரோடு ரத்தம் கொஞ்சம் கலந்திருப்பது புரியும்
எந்த கதை சொல்ல நான் எந்த கதை சொல்ல...

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY