
Hero | Hariharan |
Music Director | T.Rajendar |
Lyricist | T.Rajendar |
Singers | Mano |
Year | 1987 |
பூவும் பூவும் பார்க்கும் நேரம்
பொங்கும் காதல் அரங்கம் ஏறும்
பூவும் பூவும் பார்க்கும் நேரம்
பொங்கும் காதல் அரங்கம் ஏறும்
இள வயசுதான் ஸ்வரம் பாடுது
இதயங்களோ ஸ்ருதி சேருது
பாவை கண்ணிலே மின்னல் அடிக்குது
பாவி நெஞ்சிலே பட்டுத் தெறிக்குது
விழிகள் செய்யும் ஜாலம்
நேரம் எங்கே போதும்
பூவும் பூவும் பார்க்கும் நேரம்
பொங்கும் காதல் அரங்கம் ஏறும்
துரு துரு என்னும் பார்வை
துளைக்குது மெல்ல ஆளை
வளையினிலே கண் மொய்க்கிறது
கொலுசினிலே நெஞ்சம் லயிக்கிறது
வளையினிலே கண் மொய்க்கிறது
கொலுசினிலே நெஞ்சம் லயிக்கிறது
கையோடு கையும் கதை பேச
கன்னிக்கு நாணம் வலை வீச
வெட்கம் என்னும் தாப்பா
பாப்பா ஏனோ போட்டா
வெட்கம் என்னும் தாப்பா
பாப்பா ஏனோ போட்டா..ட்ட்ட்டா
பூவும் பூவும் பார்க்கும் நேரம்
பொங்கும் காதல் அரங்கம் ஏறும்
விழியொரு சன்னிதானம்
அதை வழிப்படும் காளை தாகம்
விழியொரு சன்னிதானம்
அதை வழிப்படும் காளை தாகம்
தரிசனம் தான் இங்கு நடக்கிறது
இவன் மனம் தான் மெல்ல துடிக்கிறது
தரிசனம் தான் இங்கு நடக்கிறது
இவன் மனம் தான் மெல்ல துடிக்கிறது
தீபத்தில் ஆராதனை ஏற்ற
தேவியின் அருளுக்கு ஏங்க
அம்மா சரணம் அம்மா என்னை பாரு சும்மா
அம்மா சரணம் அம்மா என்னைப் பாரு சும்மா
பூவும் பூவும் பார்க்கும் நேரம்
பொங்கும் காதல் அரங்கம் ஏறும்
பூவும் பூவும் பார்க்கும் நேரம்
பொங்கும் காதல் அரங்கம் ஏறும்
இள வயசுதான் ஸ்வரம் பாடுது
இதயங்களோ ஸ்ருதி சேருது
பாவை கண்ணிலே மின்னல் அடிக்குது
பாவி நெஞ்சிலே பட்டுத் தெறிக்குது
விழிகள் செய்யும் ஜாலம்
நேரம் எங்கே போதும்
பூவும் பூவும் பார்க்கும் நேரம்
பொங்கும் காதல் அரங்கம் ஏறும்...

COMPILED AND UPDATED BY