Neeradi Vaa Thendrale
Mangai Oru Gangai
Hero Suresh
Music Director Laxmikanth Pyarelal
Lyricist M.G.Vallaban
Singers S.Janaki
Year 1987
Song Lyrics

ஸரிஸ ஸரிஸ ஸரிஸ ஸரிஸ
பதப பதப பதப பதப
ரிகரி ரிகரி ரிகரி ரிகரி
தநித தநித தநித தநித

ஆஆஆ.....ககககககககக
ஆ..ஆ..ஆ..ரிரிரிரிரிரிரிரிரி
ஆ..ஆ..ஆ....த...ஆ..த...ஓ..த...ஆ..

தப மம மமா......கமபஸஸஸ
நிதஸஸஸ.....தப மம மமா
பத நிநி நிநி நிநி நிநி....நிபகக
மப தத தத தத தத....தமரிரி

நீராடி வா தென்றலே...ஓஓ.ஓஓ....
காலைத் தென்றலில் எத்தனை சந்தங்கள்
காதில் மன்மத தேசத்து தாளங்கள்,
இந்த மங்கையின் உள்ளத்தில் சொர்க்கங்கள்

மேகத் தொட்டிலில் சிட்டுக்கள் பாடுது,
நீலப்பட்டிலே சித்திரம் போடுது
நீராடி வா தென்றலே..ஓ..ஓஓ...ஹோ..ஹோ

காலைத் தென்றலில் எத்தனை சந்தங்கள்
காதில் மன்மத தேசத்து தாளங்கள்
இந்த மங்கையின் உள்ளத்தில் சொர்க்கங்கள்

மேகத் தொட்டிலில் சிட்டுக்கள் பாடுது,,
நீலப்பட்டிலே சித்திரம் போடுது,,
நீராடி வா தென்றலே...ஹோ..ஹோ

அதோ அந்த புது மலர் நானாகும் போது
அதை விட பெரும் சுகம் நான் காண்பதேது
அதோ அந்த புது மலர் நானாகும் போது
அதை விட பெரும் சுகம் நான் காண்பதேது

வெள்ளாடையில் தள்ளாடுதே
முல்லைப் பூவின் தோழி
மனதில் வசந்தம் மலரில் சுகந்தம்
புது அலையாய்...தவழ்ந்தேன்
இளம் கவியாய்... மலர்ந்தேன்
நானாக நான் இல்லையே ஓ ஓ..

காலைத் தென்றலில் எத்தனை சந்தங்கள்
காதில் மன்மத தேசத்து தாளங்கள்
இந்த மங்கையின் உள்ளத்தில் சொர்க்கங்கள்

மேகத் தொட்டிலில் சிட்டுக்கள் பாடுது
நீலப்பட்டிலே சித்திரம் போடுது,
நீராடி வா தென்றலே.. ஹோ..ஹோ..ஓ

நிலா மகள் உலா வரும் வான் வீதி மேலே.
ஒரே முறை மனோரதம் நான் ஓட்டலாமா
நிலா மகள் உலா வரும் வான் வீதி மேலே..
ஒரே முறை மனோரதம் நான் ஓட்டலாமா

கண் ஜாடையில் வெண்சாமரம் வீசும் அன்னை பூமி
இனிமை ..ஸ்வரங்கள் ..இயற்கை லயங்கள்
சுபராகம் சுரக்கும் சுதி தானே பிறக்கும்
காற்றாக நான் இல்லையே...ஹோ..ஹோ

காலைத் தென்றலில் எத்தனை சந்தங்கள்..
காதில் மன்மத தேசத்து தாளங்கள்..
இந்த மங்கையின் உள்ளத்தில் சொர்க்கங்கள்..
மேகத் தொட்டிலில் சிட்டுக்கள் பாடுது
நீலப்பட்டிலே சித்திரம் போடுது
நீராடி வா தென்றலே.. ஓ ஓ ஓ..ஹோ..ஹோ

தப மம மமா...கமபஸஸஸ
தப மம மமா...கமபஸஸஸ
நிதஸஸஸ...தப மம மமா
பத நிநி நிநி நிநி நிநி....நிபக
மப தத தத தத தத....தமரி
லாலால லா..லாலலா..ஹோ..ஹோ.

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY