Achamilla Pathaiyil
Mangai Oru Gangai
Hero Suresh
Music Director Laxmikanth Pyarelal
Lyricist Muthulingam
Singers K.S.Chitra
Year 1987
Song Lyrics

அச்சம் இல்லா பாதையில்
எல்லோரும் செல்வோமே
திட்டம் போட்டு வாழ்விலே
முன்னேறி செல்வோமே
வானமே எல்லையாய் வீரமே கொள்கையாய்
நாளுமே வாழுவோம்

அச்சம் இல்லா பாதையில்
எல்லோரும் செல்வோமே
திட்டம் போட்டு வாழ்விலே
முன்னேறி செல்வோமே

வானமே எல்லையாய் நெஞ்சில்
துணிவெனும் கொடியினை ஏற்றி வைப்போம்
தொட்டது துலங்கிட தோள் கொடுப்போம்
போர் தொடுப்போம் நாள் குறிப்போம்
இந்த நிலைமைகள் மாறிட வழி வகுப்போம்

ஆண்கள் கையில் பெண்கள் என்றும்
அடிமையில்லையே
ஆன மட்டும் சொல்லிப் பார்த்தும்
உணரவில்லையே

மாலை சூட தேடும் போது
மனித சந்தையில்
பெண்கள் முன்னே ஆண்கள் தம்மை
விலைக்கு விற்கையில்
உண்மையில் பெண்ணிடம்
அங்கு விலைமகன் ஆவது ஆண்மகனே...

அச்சம் இல்லா பாதையில்
எல்லோரும் செல்வோமே
திட்டம் போட்டு வாழ்விலே
முன்னேறி செல்வோமே

ஏழை சின்ன பொய்யை சொன்னால்
தலையில் குட்டுறான் ஹோய்...
மேடை ஏறி பொய்யை சொன்னால்
கையைத் தட்டுறான்

இல்லையென்று கையை வச்சா
சிறையில் போடுறான்
கடத்தல் காரன் கண்ணில் பட்டால்
வணக்கம் போடுறான்
நீதியும் தூங்குது இந்த
நிலைமைகள் என்றைக்கு மாறுவது
லலலலா.....லாலாலா...

அச்சம் இல்லா பாதையில்
எல்லோரும் செல்வோமே
திட்டம் போட்டு வாழ்விலே
முன்னேறி செல்வோமே
வானமே எல்லையாய் வீரமே கொள்கையாய்
நாளுமே வாழுவோம்...நெஞ்சில்

துணிவெனும் கொடியினை ஏற்றி வைப்போம்
தொட்டது துலங்கிட தோள் கொடுப்போம்
போர் தொடுப்போம் நாள் குறிப்போம்
இந்த நிலைமைகள் மாறிட வழி வகுப்போம்

ரம்பம் பம்பம் தரப்பம் தரப்பம்பம்பம்பம்
ரம்பம் பம்பம் தரப்பம் தரப்பம்பம்பம்பம்....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY