
Hero | Raghuvaran |
Music Director | L.Vaithiya Nathan |
Lyricist | Vairamuthu |
Singers | S.Janaki |
Year | 1987 |
கனவுகளே கனவுகளே
கனவுகள் காண்கின்ற கனவுகளே
நிலையை உணர்ந்து
நிஜங்களை தேடுங்கள் உறவுகளே..
புத்தம் புது உலகம்...புத்தம் புது உலகம்
இங்கே தெரிகிறது...இங்கே தெரிகிறது
வானம் என்னை வாவென்றது
ஆஹா உலகம் அழகியது
தங்கம் கொண்டு மெழுகியது
அதிசயம் தெரிகிறது..அதிசயம் தெரிகிறது
ரகசியம் புரிகிறது....ரகசியம் புரிகிறது
புத்தம் புது உலகம் இங்கே தெரிகிறது
வானம் என்னை வாவென்றது....
இயற்கைக்கு மேலே தத்துவங்கள் இல்லை
இன்பம் இங்கு கொள்ளை
என்ன இங்கு இல்லை
அந்தி சூரியன் மஞ்சள் பூசுதே
அட மனிதனுக்கு இதில் ருசியில்லையே..
அழகில் கரையும் மனமே இல்லையே
பூமியும் தென்றலும் ஓய்வதில்லையே
இயற்கையெல்லாம் சிரிக்கிறதே
புத்தம் புது உலகம் இங்கே தெரிகிறது
வானம் என்னை வாவென்றது....
துள்ளி செல்லும் ஓடை விடுகதை போடும்
மெல்ல வரும் தென்றல்
விடை சொல்லி போகும்
பார்க்கும் யாவுமே பள்ளிக்கூடமாம்
ஒரு பனித்துளியில் இந்த ஜகம் அடங்கும்
அடடா உலகம் அழகின் சுரங்கம்
வாழும் வாழ்வில் ஆழம் இல்லையே
தநிசநி தநிரிச ரிரிசசநிநி நிநிததநிநி நிநிநி சசரி

COMPILED AND UPDATED BY