
Hero | Raghuvaran |
Music Director | L.Vaithiya Nathan |
Lyricist | Vairamuthu |
Singers | S.Janaki,Rajkumar Bharathi |
Year | 1987 |
பெண் : தொடு வானம் நிஜமல்ல
தொடுவது சுலபமல்ல
புரிய மறுக்கும் வயதல்ல
கரையை மறந்தால் அதன் பேர் நதியல்ல
தொடு வானம் நிஜமல்ல தொடுவது சுலபமல்ல
புரிய மறுக்கும் வயதல்ல
கரையை மறந்தால் அதன் பேர் நதியல்ல
தொடு வானம் நிஜமல்ல தொடுவது சுலபமல்ல
அடக்கம் இல்லாமல் அலைகின்ற காளை
விஷயம் இல்லாமல் முறுக்குது வாலை
வீட்டைத் தாங்காது விரிகின்ற வாழை
அன்பு இல்லாத வீரனும் கோழை
வானத்தை மூட போர்வை இல்லை
வன்முறையாலே தீர்வு இல்லை
இனிமேல் மனங்கள் இருண்டால்
உலகில் ஒளி இல்லை
தொடு வானம் நிஜமல்ல தொடுவது சுலபமல்ல
புரிய மறுக்கும் வயதல்ல
கரையை மறந்தால் அதன் பேர் நதியல்ல
தொடு வானம் நிஜமல்ல தொடுவது சுலபமல்ல
ஆண் : நேற்று வரலாற்றில் நிகழ்ந்தது என்ன
ரத்தம் சிந்தாமல் நடந்தது என்ன
காகிதம் எல்லாமே பழங்கதை கூறும்
ஆயுதம் ஏந்தாமல் எது இங்கு மாறும்
வீட்டுக்கூரை எரியும் போது
பாட்டு கேட்க நேரம் ஏது
கிளியே.....விழிகள் சிவந்தால்
உலகில் ஒளி உண்டு
தொடு வானம் நிஜமல்ல
அதை தொட விருப்பமல்ல
கவிதை பாடும் பொழுதல்ல
முள்ளை முள்ளால் எடுத்தால் தவறல்ல

COMPILED AND UPDATED BY