Chittan Chittan Kuruvi
Kavalan Avan Kovalan
Hero Prabhu
Music Director Vijay Anand
Lyricist Vali
Singers S.Janaki
Year 1987
Song Lyrics சிட்டான் சிட்டான் குருவி சின்னக்குருவி
சிந்துதான் படிக்குதைய்யா
சிறகை அடிக்குதைய்யா
பங்குனி சித்திரை வந்ததும்
பரிசம் ஒண்ணு போடு பொழுதோடு
அட மிச்சமும் மீதியும் அப்ப நீ பார்த்துக்கலாம்

பொண்ணுதான் ஆளாச்சு பூவுடம்பு நூலாச்சு
கன்னி நான் என்னத்தை சொல்ல கண்ணுறங்கி நாளாச்சு
என்னவோ ஆயாச்சு என் மனசு நோயாச்சு
உன்னத்தான் எண்ணிய வண்ணம் புத்திகெட்டு போயாச்சு

அசத்துற நேரத்துல….அசத்துற நேரத்துல
என்னை நீ உசுப்புறியே
துவைச்ச ரவிக்கை போல என் மனசை புழியுறியே
தேதியை வச்சு மேளத்தைக் கொட்டு
ஐயரை வைச்சு தாலியைக் கட்டு மாமா சின்ன மாமா
அட செக்குபோல் எப்பவும் உன்னையே சுத்தி வாரேன்
சிட்டான் சிட்டான் குருவி...

ஏத்தம்தான் போடாம ஏரெடுத்துப் பூட்டாம
கத்திரி வெயிலில் காயும் பச்சை மண்ணு நான்தானே
ஏனுன்னு கேக்காம ஏறெடுத்துப் பாக்காம
நிக்கிற கள்ளுளி மங்கன் நீதானய்யா மச்சான் நீ

மனசுக்கு ஏத்தபடி…மனசுக்கு ஏத்தபடி
மம்முதன் நீ இருக்க
உன்னையே நினைச்சபடி ஒத்தையில நானிருக்க
வாடையில் என்னை வாட்டிடலாமா
வாலிபத் தீயை மூட்டிடலாமா மாமா சின்ன மாமா
அட ராத்திரி நான் ஒரு மாதிரி ஆயிடுறேன்

சிட்டான் சிட்டான் குருவி சின்னக்குருவி
சிந்துதான் படிக்குதைய்யா
சிறகை அடிக்குதைய்யா
பங்குனி சித்திரை வந்ததும்
பரிசம் ஒண்ணு போடு பொழுதோடு
அட மிச்சமும் மீதியும் அப்ப நீ பார்த்துக்கலாம்...

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY