
Hero | Vijayakanth |
Music Director | Ilayaraja |
Lyricist | Vairamuthu |
Singers | S.Janaki,Sai Baba |
Year | 1987 |
பெண் : யாருன்னு கேக்கிறியா
யாருன்னு கேக்கிறியா..அண்ணே அண்ணே
யாருன்னு கேக்கிறியா
யாருன்னு கேக்கிறியா..அண்ணே அண்ணே
யாருன்னு கேக்கிறியா
அலுக்களும் குலுக்களும் தளுக்கையும் பாத்தாலே
சந்தேகம் தோணுதண்ணே
ஏனிந்த செட்டப்பு எனக்கொண்ணும் புரியல்ல
கேட்டுத்தான் சொல்லுங்கண்ணே
ஆண் : அட உன் வீட்டு சங்கதி எனக்கெதுக்கம்மா
ஒரு நாளும் உன் வாய் இருக்காது சும்மா
அட உன் வீட்டு சங்கதி எனக்கெதுக்கம்மா
ஒரு நாளும் உன் வாய் இருக்காது சும்மா
அம்மம்மா....
பெண் : யாருன்னு கேக்கிறியா..
அண்ணே அண்ணே யாருன்னு கேக்கிறியா
யாருன்னு கேக்கிறியா..அண்ணே அண்ணே
யாருன்னு கேக்கிறியா
மழலை பிஞ்சே மயக்கம் கொள்ளாதே
மனசுக்குள்ளே களங்கம் இல்ல
ஒதுங்கி நிக்க நிழலுமில்ல
உதவி செய்ய யாருமில்ல
தவிக்கும் இந்தக் குயிலக் கண்டு
அபயம் தந்த தெய்வமுண்டு
அபயம் தந்த தெய்வத்த நம்பி
வந்தேனடி தஞ்சம் என்று
தப்பாக நீ என்ன எப்போதும் எண்ணாதே
உண்மை இதுதானே அட அப்பாவி பொண்ண
நீ சந்தேகம் கொள்ளாதே சித்தி இல்ல நானே
சொந்தங்கள் பந்தங்கள் இல்லாத ஏழை
போவென்று சொன்னாலே போவேனே நாள
கோபங்கள் கொள்ளாதே மானே..
யாருன்னு கேக்கிறியா கண்ணு கண்ணு
யாருன்னு கேக்கிறியா
சொத்து சுகமில்ல சொல்லிக் கொள்ள
சொந்தங்கள் ஏதுமில்ல
நூலேதும் இல்லாத காத்தாடி போலேதான்
வீதியில் நான் அலைஞ்சேன்
அன்பான பூவுள்ளம் கூப்பிட்டதால் இங்கே
வீட்டுக்குள் நான் நொழஞ்சேன்....

COMPILED AND UPDATED BY