Manasellam Mazhaiye
Saguni
Hero S.Karthi
Music Director Gv prakash
Lyricist Na. Muthukumar
Singers G.V.Prakash,Sonu Niham,Sainthavi
Year 2012
Song Lyrics

ஆண் :மனசெல்லாம் மழையே
நனைகிறேன் உயிரே
என் நெஞ்சில் வந்து தங்கி சாரல் அடித்தாய்
என்னாகும் உயிரே உயிரே
என் கண்ணில் வந்து நின்று என்னை பறித்தாய்
என்னாகும் உயிரே உயிரே....

ஆண் :இரவில் வந்தது சந்திரனா என் அழகே
வந்தது உன் முகம்தான்
வெண்ணிலவோ வாழ்ந்ததும் தேய்ந்திடுமே
உன் அழகோ தேய்ந்திடாது வெண்ணிலா

பெண் :பகலில் எரிப்பது சூரியனா என் அழகே
உன் இரு பார்வைகள்தான்
உன் இமைகள் போரிடும் ஆயுதம்தான்
என்னுயிரே என்னை என்ன செய்கிறாய்

ஆண் :மழையே மனம் உன்னாலே பூப்பூக்குதே
மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே

ஆண் :வானில் போகும் பறவைகளாய்
நீயும் நானும் பிறந்திடலாம் உலகையே மறக்கலாம்

பெண் :ஹா வேறு வேறு விண்வெளியில்
மாறி மாறி திரிந்திடலாம் பறக்கலாம் மிதக்கலாம்
காற்றாகி கை கோர்த்து போவோமே
ஆண் :முகிலாகி அங்கும் இங்கும் ஊஞ்சலாடுவோம்

பெண் :கனவில் வாழ்வது சாத்தியமா
என் எதிரே நடப்பது மந்திரமா
கண் பார்க்கும் காட்சிகள் தந்திரமா
என் தேகம் எங்கு நீந்தி போகுதோ

ஆண் :கனவில் வாழ்வது சாத்தியமே
என் கனவும் பலிப்பது நிச்சயமே உன்
விரலை பிடிப்பேன் இக்கணமே
உன் உருவம் என்னுள் என்றும் வாழுமே
மழையே மனம் உன்னாலே பூப்பூக்குதே
மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே

ஆண் :காதலாகி கரைந்து விட்டால்
காலம் நேரம் மறந்திடுமே வானிலை மாறுமே

பெண் :ஏழு வண்ண வானவில்லில்
நூறு வண்ணம் தோன்றிடுமே யாவுமே மாயமே
வெயிலோடு மழை வந்து தூறுமே
ஆண் :முகிலாகி அங்கும் இங்கும் ஊஞ்சலாடுவோம்

ஆண் :தரையில் விண்மீன் வருவதில்லை
வந்தாலும் கண் அதை பார்ப்பதில்லை
பார்த்தாலும் கை அதை தொடுவதில்லை
தொட்டாலோ என்ன ஆகும் என் மனம்

பெண் :தரையில் விண்மீன் வருவதுண்டு
வந்தாலும் கண் அதை பார்ப்பதுண்டு
பார்த்தாலும் கை அதை தொடுவதுண்டு
தொட்டாலோ காதல் ஆகும் உன் மனம்

ஆண் :மழையே மனம் உன்னாலே பூப்பூக்குதே..ஓஒ
பெண் :மனசெல்லாம் மழையே....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY