Neeradum Thamaraiye
Pudhiya Poovithu
Hero Raja
Music Director Kannan
Lyricist S. Arivumani
Singers S.Janaki,P.Jayachandran,Sakthi Shanmugam
Year 1986
Song Lyrics

ஆண் : நீராடும் தாமரையே வேரோடு கோபமென்ன
பெண் : மாறாது என் நிலையே வேரோட ஞாயமில்லை
ஆண் : நீ இதழ் மூடி குவிந்திருந்தால் மணம் வீசுமோ
பெண் : மலர் மீது இடி விழுந்தால் இதழ் தாங்குமோ

ஆண் : நாம் இணைஞ்சா தாய்மையடி
உள்ளங்கையில் பூமியடி
பெண் : ஆண்கள் எனும் இனமே
பூவிதழதில் தினம் வழியும்
தேன் குடிக்கும் வண்டினமே

ஆண் : நீராடும் தாமரையே வேரோடு கோபமென்ன
பெண் : மாறாது என் நிலையே வேரோட ஞாயமில்லை

பெண் : பூமாலை ஒன்றை தீ வந்து தின்ன
காலங்கள் பார்த்திடுதே
ஆண் : தீபத்தை நீயும் தீயென்று சொல்ல
காற்றுக்கும் வேர்த்திடுதே

பெண் : மனம் முழுக்க தப்புக் கணக்கு
ஆண் : இனி எதுக்கு வம்பு வழக்கு
பெண் : பூ ஒன்று புயலோடு கற் கோர்த்து வாழாது
பொய்யான உன்னோடு என் வாழ்வு ஏது
ஆண் : நீ போட்ட மணமாலை சருகாகி போகாது
போதாது ஏழேழு ஜென்மங்கள் சேரு

ஆண் : நீராடும் தாமரையே வேரோடு கோபமென்ன
பெண் : மாறாது என் நிலையே வேரோட ஞாயமில்லை

ஆண் : ஹே ரெட்ட மாட்டு வண்டியிலே
ஒத்த மாடு சண்டி பண்ண
ஊரு எப்ப சேர அட பொழுதாகுது கூட

பெண் : நீ தந்த மெத்தை கண்கட்டு வித்தை
கண்ணீரால் பூ தெளித்தாய்
ஆண் : போர்வைக்குள் உண்மை
கண் மூடிக் கொள்ள சோகத்தை நீ அளித்தாய்

பெண் : வானம் முழுக்க மேகம் கலங்கும்
ஆண் : பூமி கலந்தா மண்ணு குளிரும்
பெண் : நதி வெள்ளம் நடை போட ஆகாயம் தேடாது
இருளோடு உறவேது ஒளி வீசும் போது
ஆண் : கடலோடு நதி வந்து சேராமல் போகாது
உயிரோடு உயிராக ஒன்றாக மாறு

ஆண் : நீராடும் தாமரையே வேரோடு கோபமென்ன
பெண் : மாறாது என் நிலையே வேரோட ஞாயமில்லை
ஆண் : நீ இதழ் மூடி குவிந்திருந்தால் மணம் வீசுமோ
பெண் : மலர் மீது இடி விழுந்தால் இதழ் தாங்குமோ

ஆண் : நாம் இணைஞ்சா தாய்மையடி
உள்ளங்கையில் பூமியடி
பெண் : ஆண்கள் எனும் இனமே
பூவிதழதில் தினம் வழியும்
தேன் குடிக்கும் வண்டினமே.....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY