Kalyana Paattu Naan
Pudhiya Poovithu
Hero Raja
Music Director Kannan
Lyricist Radhapuram N.Moorthy
Singers SP. Balasubramaniam,S.Janaki
Year 1986
Song Lyrics

பெண் : ஆஆஆஆ......ஆஆஆஆ....
ஆண் : கல்யாண பாட்டு நான் பாட கேட்டு
துள்ளாதோ தென்றல் பூமேடை போட்டு
கல்யாண பாட்டு நான் பாட கேட்டு
துள்ளாதோ தென்றல் பூமேடை போட்டு

பெண் : குங்குமப் போட்டு நெத்தியில் வச்சு
வாடாத மல்லிகை மாலையை போட்டு
குங்குமப் போட்டு நெத்தியில் வச்சு
வாடாத மல்லிகை மாலையை போட்டு

ஆண் : கையோடு கை சேர
வெண் மேகம் பாய் போட
பெண் : மெதுவா ஆண் : இதழில்
பெண் : சுவையா ஆண் : தரவா

பெண் : கல்யாண பாட்டு நான் பாட கேட்டு
ஆண் : துள்ளாதோ தென்றல் பூமேடை போட்டு

ஆண் : சின்னஞ்சிறு வண்ணக்கிளி என்னோட பேசு
செந்தாழம் பூவுக்கும் வாசந்தான் பூசு
பெண் : அம்மாடி பொய்யாக வர்ணிக்கும் ஆளு
போகாதே இரவே நில் என் பேச்ச கேளு

ஆண் : முத்துக் குளித்திட போவோமடி
பெண் : வெட்கப்படும் இந்த அல்லிக்கொடி
ஆண் : முத்துக் குளித்திட போவோமடி
பெண் : வெட்கப்படும் இந்த அல்லிக்கொடி
பெண் : குளிரும் ஆண் : உடலில்
பெண் : இதமாக ஆண் : சூடேற

பெண் : கல்யாண பாட்டு நான் பாட கேட்டு
ஆண் : துள்ளாதோ தென்றல் பூமேடை போட்டு

ஆண் : பெண்ணே நீ கண்ணுக்கொரு வண்ண பூஞ்சோலை
வெட்கத்த விட்டுத் தா மண்ணுக்கு சேலை
பெண் : பொண்ணுக்கு எப்போதும் வெட்கம்தான் மாமா
பொங்காத உள்ளுக்குள் வெப்பந்தான் ஆமா

ஆண் : நித்தம் நிலவினில் நீந்திடுவோம்
பெண் : புத்தம் புது சுகம் ஏந்திடுவோம்
ஆண் : நித்தம் நிலவினில் நீந்திடுவோம்
பெண் : புத்தம் புது சுகம் ஏந்திடுவோம்
ஆண் : இளமை பெண் : கதையை
ஆண் : சுகமாக பெண் : நாம் பேச

இருவரும் : கல்யாண பாட்டு நான் பாட கேட்டு
துள்ளாதோ தென்றல் பூமேடை போட்டு
கல்யாண பாட்டு நான் பாட கேட்டு
துள்ளாதோ தென்றல் பூமேடை போட்டு

பெண் : குங்குமப் போட்டு நெத்தியில் வச்சு
வாடாத மல்லிகை மாலையை போட்டு
ஆண் : குங்குமப் போட்டு நெத்தியில் வச்சு
வாடாத மல்லிகை மாலையை போட்டு

பெண் : கையோடு கை சேர
வெண் மேகம் பாய் போட
இருவரும் : மெதுவா இதழில் சுவையா தரவா
கல்யாண பாட்டு நான் பாட கேட்டு
துள்ளாதோ தென்றல் பூமேடை போட்டு.....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY