Nanbaa Vaa Nanbaa
Saattai
Hero Samuthirakani
Music Director D.imman
Lyricist Yugabharathy
Singers Saisharan
Year 2012
Song Lyrics

வருவது ஒருமுறை உலகிலே
இதை அறிகிற மனிதனும் கடவுளே
தவறுகள் திருந்திடும் வரையிலே
வரும் தடைகளும் தகர்ந்திடும் முடிவிலே

நமை நாமே உணர்ந்தாலே
கிடையாது வேதனை மனதிலே
நதி போல நடந்தாலே
ஒரு கோடி சூரியனும் தரையிலே
நண்பா வா நண்பா நண்பா வா நண்பா

சிறகுகள் விரித்திடு பறக்கலாம் வரும்
சிரமங்கள் பொறுத்திடு சிரிக்கலாம்
அலைகடல் என தினம் குதிக்கலாம்
கடல் கடந்தொரு பெயரையும் எடுக்கலாம்

மழை ஊற்று அனல் காற்று
எதுவான போதிலும் ரசிக்கலாம்
சில வாரம் பல பூமி
என நாமும் மாறவே நினைக்கலாம்
நண்பா வா நண்பா நண்பா வா நண்பா

காலம் ஒன்று மாறும் என்று
காத்திருப்பதா நல்லது
காலம் தன்னை மாறச் செய்யும்
சாட்டை நெஞ்சிலே உள்ளது

தூசியாலே கலங்கும் விழியை
துடைப்பதா விசித்திரம்
காற்றும் கூட நமது பெயரை
உரைப்பதே சரித்திரம்
நண்பா வா நண்பா நண்பா வா நண்பா
வா நண்பா வா வா வா

அன்பை விட சிறந்தது இல்லை என முழங்கிடு
புன்னகை என்னும் உடையே முகவரி
உள்ளவரை விழித்திரு உள் மனதில் பசித்திரு
ஒற்றுமையில் இவ்வுலகை அலங்கரி

நண்பா வா நண்பா நண்பா வா நண்பா
நண்பா வா நண்பா நண்பா நண்பா
நண்பா வா வா வா
நண்பா வா நண்பா நண்பா நண்பா
வா நண்பா வா வா வா

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY