Adi Raangi Raangi
Saattai
Hero Samuthirakani
Music Director D.imman
Lyricist Yugabharathy
Singers Santhosh Hariharan
Year 2012
Song Lyrics

அடி ராங்கி ராங்கி ராங்கி
நீ போற என் உசுர வாங்கி அடி
ராங்கி என் ராங்கி ராங்கி
நீ போற என் உசுர வாங்கி

உறங்காம கிடக்கேனே நீ
என்னதுக்கு கண்ணுக்குள்ள நுழஞ்ச
தவறேதும் புரியாம நீ
என்னதுக்கு நெஞ்ச வந்து அறைஞ்ச
அய்யோ பாடாபடுத்துறியே பாயா சுருட்டுறியே

என்னானதோ ஏதானதோ
ஒண்ணும் புரியாமலே
அல்லாடுறேன் உன்னால நான்
சொல்ல தெரியாமலே

அன்னம் தண்ணி தேவையில்ல
உன்ன பத்தி பேசுனா
அட்ட கத்தி கூட வெட்டும்
உன்ன சொல்லி வீசுனா

அழகாலே நிதம் நீயே
என்ன கட்டி வச்சு அடிக்கிறியே
என்ன ஓடா உடைக்கிறியே
காடா கொளுத்துறியே யே யே
அடி ராங்கி என் ராங்கி ராங்கி
நீ போற என் உசுர வாங்கி

காப்பி தண்ணி போல என்ன
கண்ணு ரெண்டும் ஆத்துதே
மூடி வச்ச ஆசை எல்லாம்
பொத்துகிட்டு ஊத்துதே
மொத்ததுல என்ன நீயே பித்துக்குளி ஆக்குற
வெட்டி பய என்ன கூட புத்தகமா மாத்துற

உறி போல குறி பாத்து என்ன
சில்லு சில்லா உடைக்கிறியே
என்ன நாரா கிழிக்கிறியே
நல்லா குழப்புறியே யே யே
அடி ராங்கி என் ராங்கி ராங்கி
நீ போற என் உசுர வாங்கி

உறங்காம கிடக்கேனே
நீ என்னதுக்கு கண்ணுக்குள்ள நுழஞ்ச
தவறேதும் புரியாம நீ
என்னதுக்கு நெஞ்ச வந்து அறைஞ்ச

தானா நானானே நானே நானே
தானா நானானே நானே நானே

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY