Adhiroobaney Adhikarane
Saamy 2
Hero Vikram
Music Director Devi sri prasad
Lyricist Viveka
Singers M.M.Manasi
Year 2018
Song Lyrics

அதிரூபனே அதிகாரனே
அதிரூபனே அதிரூபனே
அதிகாரனே அதிகாரனே

சூறை காற்றென வந்தாய்
என் சுதந்திரம் மீண்டும் தந்தாய்
மாமலையாகி நின்றாய்
மத யானை போலே வென்றாய்

அதிரூபனே அதிரூபனே
அதிகாரனே அதிகாரனே

உன் பத்து விரலும் ஆயுதம் ஊஊ…
உன்னை பார்க்கும் போதே பயம் வரும் ஊஊ…
நீதான் ஆணின் இலக்கணம் நீ
துணையாய் நின்றால் வருமே தலைகணம்

அதிரூபனே அதிகாரனே
அதிரூபனே அதிரூபனே அதிரூபனே
அதிகாரனே அதிகாரனே அதிகாரனே

மழையாய் நீ வந்தாய்
நான் குடையோடு நின்றேன்
பனியாக நின்றாய்
நான் வெயிலாகி வந்தேன்

உரையாட முன்பு
மொழி ஏதும் இல்லை
என் நிழல் கூட இன்று
கேட்கும் உன் சொல்லை

என் காற்றில் ஏதோ கலந்தது ஊஊ…
என் கண்ணில் ஏதோ நுழைந்தது ஊஊ…
உன்னால் நானும் குழம்பினேன் இந்த
குழப்பம் தீர கூடாதென்றும் விரும்பினேன்

அதிரூபனே அதிகாரனே
அதிரூபனே அதிரூபனே
அதிகாரனே அதிகாரனே

மனதோடு ஏதோ மெலிதான மாற்றம்
திசை மாறும் நெஞ்சில்
உன் தெளிவான தோற்றம்

சிறுமூளை கூட செயலின்றி வாட
தடுமாறி போனேன்
நான் தலை கீழாய் ஆனேன் ……..

நீ தூரம் நின்றால் மெல்லினம்
உன்னை தொட்டு பார்த்தால் வல்லினம்
நீதான் துணிவின் ரகசியம்
என் வாழ்வில் உன்னை கண்டதுதானே அதிசயம்

அதிரூபனே அதிகாரனே
அதிரூபனே அதிரூபனே அதிரூபனே
அதிகாரனே அதிகாரனே அதிகாரனே

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY