Senganthal Kaiyaale
Rowthiram
Hero Jeeva
Music Director Prakash Nikki
Lyricist Lalithanand
Singers Haricharan
Year 2011
Song Lyrics

செங்காந்தள் கையாலே உயிரைத் தொட்டுப் போனாய்
ஒரு செந்தூர ஆகாயம் கண்ணில் தந்துப் போனாய்
ஓயாத பூத்தூறல் உள்ளே ஊற்றிப்போனாய்
அவள் தோள் சாய்ந்து நான் பேச ஆசை மூட்டிப் போனாய்

பழகிய நாட்கள் எல்லாமே
அழகாய் மாற்றிப் போனாளே
பல முறை அவளைப் பார்த்தாலும்
அடங்கா ஆவல் கொடுத்தாளே

ஈரம் மனதோரம் நதி நதியெனத்தானே
வந்தாள் வந்தாள் தூரம் வெகு தூரம்
ஒரு அலையெனதானே தீண்டிச்சென்றாள்

செங்காந்தள் கையாலே உயிரைத் தொட்டுப் போனாய்
ஒரு செந்தூர ஆகாயம் கண்ணில் தந்துப் போனாய்
ஓயாத பூத்தூறல் உள்ளே ஊற்றிப்போனாய்
அவள் தோள் சாய்ந்து நான் பேச ஆசை மூட்டிப் போனாய்

ஏதோ போல ஆனேன் எதனாலே மாறிப் போனேன்
எமன் போலே கொல்லும் பார்வை
எனை உரசும் போதும் உயிர் வாழ்கிறேன்

அட யாரை தாண்டும் பொழுதும் ஏதும் தோன்றிடாது
அவளைப் பார்க்கும் பொழுது
என் கால்கள் தாண்டிப் போகாது

நேற்றுப் பார்த்த நிலா எட்டாத தூரம் தூரம்
ஏனோ ஏனோ இன்று என் கைகள் நீட்டும் தூரம்
காற்றில் போகும் இலையானனே ஏனோ நானும்
தூக்கிப் போனாய் என்னை எங்கேயோப் போனேன் நானும்

தேடி தினம் தேடி உடை உடுத்திடும்
மாற்றம் தந்தாள் தந்தாள் மாயம் இது தானோ
என் நிழலுக்கும் வண்ணம் ஏன் வந்ததோ

செங்காந்தள் கையாலே உயிரைத் தொட்டுப் போனாய்
ஒரு செந்தூர ஆகாயம் கண்ணில் தந்துப் போனாய்
ஓயாத பூத்தூறல் உள்ளே ஊற்றிப்போனாய்
அவள் தோள் சாய்ந்து நான் பேச ஆசை மூட்டிப் போனாய்

கூட்டம் கூடும் சாலை விரல் கோர்த்து போகும் வேளை
பலர் பார்த்து போகும் போதும்
அது தனிமை போல ஏன் தோன்றுதோ
அவள் கூந்தல் ஆடத்தானே தோளில் மேடை கேட்பேன்
மெலிதாய் தீண்டும் போது சிறிதாக கர்வம் கொள்வேனே

தீயில் செய்த கண்கள் என் நெஞ்சை எட்டி பார்க்கும்
பூவில் நெய்த கைகள் ஏதேதோ என்னை கேட்கும்
வானவில்லின் ஏழு வண்ணம்தான் சாயம் போகும்
வெள்ளை மேகம் அவள் எல்லோரா தோற்று போகும்

ஈரம் மனதோரம் நதி நதியெனத்தானே
வந்தாள் வந்தாள் தூரம் வெகு தூரம்
ஒரு அலையெனதானே தீண்டிச்சென்றாள்

பழகிய நாட்கள் எல்லாமே
அழகாய் மாற்றிப் போனாளே
பல முறை அவளைப் பார்த்தாலும்
அடங்கா ஆவல் கொடுத்தாளே

வானம் அதன் தாகம்
கடல் குடித்திடும் காலம் வந்தாள் வந்தாள்
நேரம் வெகுநேரம் உடன்
நடந்திடும் ஆசை தந்தாள் அவள்

செங்காந்தள் கையாலே உயிரைத் தொட்டுப் போனாய்
ஒரு செந்தூர ஆகாயம் கண்ணில் தந்துப் போனாய்
ஓயாத பூத்தூறல் உள்ளே ஊற்றிப்போனாய்
அவள் தோள் சாய்ந்து நான் பேச ஆசை மூட்டிப் போனாய்

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY