
Hero | Sivakumar Pandian Raja |
Music Director | Gangai Amaran |
Lyricist | Gangai Amaran |
Singers | Venkat Prabhu,Premji |
Year | 1987 |
அரச மரம் தேடி அமர்ந்த பிள்ளையாரே
நீ எந்த பள்ளியிலும் என்னைப் போல் படிச்சதுண்டா
படிக்காம பாரதத்த படபடன்னு எழுதினேயே
எனக்கந்த ஞானத்ததான் பிறப்பிலே கொடுக்கலையே
போன ஜென்மம் நாங்க செஞ்ச பாவத்தில இப்ப இந்த
பள்ளிக்கூடம் வந்துட்டுத்தான் திட்டுகள வாங்கிக்கிறோம்
பள்ளிக்கூடம் போகாம பாடத்த படிக்காம
பரீட்சையும் எழுதாம
நாங்க பாஸாக வேணும் பிள்ளையாரே
பள்ளிக்கூடம் போகாம பாடத்த படிக்காம
பரீட்சையும் எழுதாம
நாங்க பாஸாக வேணும் பிள்ளையாரே
அதுக்கு உனக்கு எத்தன தேங்கா வேணும்
அதுக்கு உனக்கு எத்தன தேங்கா வேணும்
பள்ளிக்கூடம் போகாம பாடத்த படிக்காம
பரீட்சையும் எழுதாம
நாங்க பாஸாக வேணும் பிள்ளையாரே
அட்மிஷன வாங்கிடத்தான்
அலையறாங்க எங்கப்பா
அவங்க படும் துன்பத்தத்தான்
சொல்ல வார்த்தை இல்லையப்பா ( 2 )
பள்ளிக்கூடம் நிறைய இருந்தும்
எடம் கெடைக்கவில்லையப்பா
பள்ளியிலே எடம் கெடச்சா
பாடம் ஏறவில்லையப்பா
பள்ளிக்கூடம் போகாம பாடத்த படிக்காம
பரீட்சையும் எழுதாம
நாங்க பாஸாக வேணும் பிள்ளையாரே
அதுக்கு உனக்கு எத்தன தேங்கா வேணும்
அதுக்கு உனக்கு எத்தன தேங்கா வேணும்
டீச்சருக்கு மூடிருந்தா
நல்லா சொல்லி கொடுப்பாங்க
வீட்டுலத்தான் சண்டையின்னா
சிடுசிடுன்னு விழுவாங்க... ( 2 )
ஹோம்வொர்க்கு செய்ய சொல்லி
ஓதஓதன்னு ஒதைப்பாங்க
வாரம் வாரம் டெஸ்ட்டு வச்சு
வாட்டி வாட்டி எடுப்பாங்க
பள்ளிக்கூடம் போகாம பாடத்த படிக்காம
பரீட்சையும் எழுதாம
நாங்க பாஸாக வேணும் பிள்ளையாரே
அதுக்கு உனக்கு எத்தன தேங்கா வேணும்
பள்ளிக்கூடம் போகாம பாடத்த படிக்காம
பரீட்சையும் எழுதாம
நாங்க பாஸாக வேணும் பிள்ளையாரே....

COMPILED AND UPDATED BY