
Hero | Sivakumar Pandian Raja |
Music Director | Gangai Amaran |
Lyricist | Nagai Swaminathan |
Singers | M.S.Viswanathan |
Year | 1987 |
சொந்தங்களே பந்தங்களே
சோகச் சுமை தாங்கியே
காலம் கரைந்தோடுது
துன்பங்களில் நீந்தியே இந்த மனம் வாடுது
கண்ணீரும் சோகம் பாடுது
சொந்தங்களே பந்தங்களே....
மஞ்சளுக்கும் மாலைக்கும்
இன்று என்ன ஆனது
நெஞ்சில் வந்த இன்பமோ
வந்த வழி போனது
ஒரு கொஞ்சும் கிளி தன்னந்தனி
கூட்டுக்குள்ளே ஏங்குது
தன் கண்ணிரெண்டில் வெள்ளமென
கங்கை நதி பொங்குது
போன வழி பாதை தேடுது இன்று
சொந்தங்களே பந்தங்களே....
தாகம் கொண்ட மானிடன்
தன்னை மட்டும் பார்க்கிறான்
ஞானம் வந்த போதிலும்
கேள்வி மட்டும் கேட்கிறான்
தன் பிள்ளைக்குட்டி வாழ மட்டும்
சொத்துக்களை சேர்கிறான்
தான் உள்ள மட்டும் ஊர் உலகை
வேறுலகாய் பார்க்கிறான்
தந்தனைக்கும் வாழ்ந்து சாகிறான் இங்கே
சொந்தங்களே பந்தங்களே
சோகச் சுமை தாங்கியே
காலம் கரைந்தோடுது
துன்பங்களில் நீந்தியே
இந்த மனம் வாடுது
கண்ணீரும் சோகம் பாடுது
சொந்தங்களே பந்தங்களே
சோகச் சுமை தாங்கியே
காலம் கரைந்தோடுது
துன்பங்களில் நீந்தியே
இந்த மனம் வாடுது.....

COMPILED AND UPDATED BY