Kannamma Kanvizhi
Ratsasan
Hero Vishnu Vishal
Music Director Ghibran
Lyricist Ramkumar
Singers Sean Roldan
Year 2018
Song Lyrics

கண்ணம்மா கண் விழி கண்ணீர் தான் என் மொழி
நீயில்லா வானத்தின் நீளம் தான் என் வலி
எங்கு இருப்பாய் அங்கு வருவேன்
வேறு என்ன வேண்டும்

கண்ணம்மா கண்விழி கண்ணீர் தான் என் மொழி
நீயில்லா வானத்தின் நீளம் தான் என் வலி
எங்கு இருப்பாய் அங்கு வருவேன்
வேறு என்ன வேண்டும்

விண்மீன்கள் தங்கி செல்லும் வீடு
வெண் இறகில் கட்டி வைத்த கூடு இது
உன்னாலே….உன்னாலே
இன்றானது இருள் வாழும் காடு

அன்பில் நீ என்னை சூழ்ந்த கங்கை
அந்நதியில் மூச்சடைத்த என் வாழ்க்கை
இனி எந்நாளும் உன்னாலே நானாவேன்
காற்றிழந்த யாக்கை

இது கனவாய் மாறி நீ வருவாய் என
தினம் தினம் விழிப்போம் உனக்கெனவே
அது வரை இவ்வாழ்வு அடர்வனமே
இனி எப்போது இப்பூமி உயிர் பெறுமோ சொல்

கண்ணம்மா கண்விழி கண்ணீர் தான் என் மொழி
நீயில்லா வானத்தின் நீளம் தான் என் வலி
எங்கு இருப்பாய் அங்கு வருவேன்
வேறு என்ன வேண்டும்.....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY