
Hero | Cheran |
Music Director | Vidyasagar |
Lyricist | Yugabharathy |
Singers | Tippu |
Year | 2008 |
வானத்தை விட்டு விட்டு
மேகங்கள் போவதென்ன
வாசத்தை விட்டு விட்டு
பூவெல்லாம் பூத்ததென்ன
பாதத்தை விட்டு விட்டு
பயணங்கள் நீள்வதென்ன
தாகத்தை விட்டு விட்டு
தண்ணீரின் தேவையென்ன
என்னை மட்டும் விட்டு விட்டு
பூமி இங்கு சுத்துது என்ன
கண்கள் இரண்டை கட்டி விட்டு
காண சொல்லும் காட்சியென்ன
கனவுகள் அலை போல நிரந்தரம் கிடையாது
கடல் அலை போல ஓயாது ஓஹோ…
துயரங்கள் பனி போல விலகிடும் தாமாக
இனிமைகளை சேரும் நாள் எது எது
வானத்தை விட்டு விட்டு
மேகங்கள் போவதென்ன
வாசத்தை விட்டு விட்டு
பூவெல்லாம் பூத்ததென்ன
வானொலியில் பாட்டு வரும்
எனது பாடல் எதுவோ
வீதியெல்லாம் பூக்கடைகள்
எனது பூவும் எதுவோ
கோவிலிலே தீப விழா
எனது தீபம் எதுவோ
பாதம் எல்லாம் கடற்கரையில்
எனது தடமும் எதுவோ
தேடித் தேடி தேய்ந்து போனேன்
தேடல் என்று தீருமோ
கானல் நீரில் ஆசை வீணே
தேடி என்ன லாபமோ
வானத்தை விட்டு விட்டு
மேகங்கள் போவதென்ன
வாசத்தை விட்டு விட்டு
பூவெல்லாம் பூத்ததென்ன
காகிதமாய் நானிருந்தேன்
கவிதை எழுதி பழக
நான் எழுதும் வேளையிலே
மொழிகள் யாவும் தயங்க
தூரிகையாய் நானிருந்தேன்
அழகை நானும் வரைய
நான் வரையும் வேளையிலே
நிறங்கள் ஓடி ஒளிய
வேறு வேறு வேஷம் போட்டேன்
காணவில்லை யாருமே
மேலும் மேலும் சோர்ந்து போனேன்
மாறவில்லை கோணமே
வானத்தை விட்டு விட்டு
மேகங்கள் போவதென்ன
வாசத்தை விட்டு விட்டு
பூவெல்லாம் பூத்ததென்ன
பாதத்தை விட்டு விட்டு
பயணங்கள் நீள்வதென்ன
தாகத்தை விட்டு விட்டு
தண்ணீரின் தேவையென்ன
என்னை மட்டும் விட்டு விட்டு
பூமி இங்கு சுத்துது என்ன
கண்கள் இரண்டை கட்டி விட்டு
காண சொல்லும் காட்சியென்ன
கனவுகள் அலை போல நிரந்தரம் கிடையாது
கடல் அலை போல ஓயாது ஓஹோ…
துயரங்கள் பனி போல விலகிடும் தாமாக
இனிமைகளை சேரும் நாள் எது எது

COMPILED AND UPDATED BY