Enna Pulla Senja Nee
Raman Thediya Seethai
Hero Cheran
Music Director Vidyasagar
Lyricist Jayantha
Singers Vidyasagar
Year 2008
Song Lyrics

என்ன புள்ள செஞ்ச நீ ஹோய் பாவி பய நெஞ்ச நீ
என்ன புள்ள செஞ்ச நீ ஹோய் பாவி பய நெஞ்ச நீ

பார்க்கையிலே சொக்க வச்ச பறக்கத்தான் ரெக்க வச்ச
திக்க வச்ச தெணற வச்ச திசையத்தான் உணர வச்ச
தெற்க வச்ச வள்ளுவனா ஒத்தையிலே நிக்க வச்ச
என்ன புள்ள செஞ்ச நீ ஹோய் பாவி பய நெஞ்ச நீ

கொள்ளக்காரன் நானே கொள்ளயாகி போனேன் ஏ
மிச்சம் மீதி ஏதும் இல்ல எல்லாம் தொலைச்சேனே
தேதி போல நாளும் தேஞ்சு போகும் தேகம்
நான் தேஞ்ச போதும் வளருதே காதல் தேயாம

தண்ணீரில் உண்டாகும் மீன்கள்
ஹே தண்ணீரில் வேகின்ற மாயம்
உன்னாலே வாழ்கின்ற நெஞ்சு
ஹே உன்னாலே ஏன் இந்த காயம்

என் வாழ்க்கையே நீ வந்துதான் ஆரம்பமே ஆகும்
என்ன புள்ள செஞ்ச நீ ஹோய் பாவி பய நெஞ்ச நீ

ஒன்ன பாத்த வேள உடம்பும் செங்கல் சூலை
ஏ செம்பரப்பு அருவியா நீயே வந்தாயே
பாத மண்ண பிசைஞ்சே பான போல வளைஞ்சேன் ஏ
என்ன நீயே என்னிடமே மாத்தி தந்தாயே

எப்போதும் உன் பேரை சொல்லி
என் உள்நாக்கும் தண்டோரா போடும்
உப்பாத்தில் மீனாக தானே
ஏ அப்போதும் உன் பிம்பம் ஆடும்
என் வாழ்க்கையே நீ வந்துதான் ஆரம்பமே ஆகும்

என்ன புள்ள செஞ்ச நீ பாவி பய நெஞ்ச நீ
என்ன புள்ள செஞ்ச நீ பாவி பய நெஞ்ச நீ
பார்க்கையிலே சொக்க வச்ச பறக்கத்தான் ரெக்க வச்ச
திக்க வச்ச தெணற வச்ச திசைய தான் உணர வச்ச
தெற்க வச்ச வள்ளுவனா ஒத்தையிலே நிக்க வச்ச

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY