Ippave Ippave
Raman Thediya Seethai
Hero Cheran
Music Director Vidyasagar
Lyricist Viveka
Singers Harini,Madhu Balakrishnan
Year 2008
Song Lyrics பெண் :ம்ஹ்ம் ஹ்ம்ம் ம்ஹ்ம் ஹ்ம்ம்
ஆண் :இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
பெண் :ம்ஹ்ம் ஹ்ம்ம்
இப்பவே இப்பவே பேசணும் இப்பவே
பெண் :ம்ஹ்ம் ஹ்ம்ம்

ஆண் :கண்ணை மூடி உன்னைக் கண்ட அப்பவே அப்பவே
கை வளையல் ஓசை கேட்டால் அப்பவே அப்பவே
ஆடை வாசம் நாசி தொட்ட அப்பவே அப்பவே
ஆயுள் கைதி ஆகிவிட்டேன் அப்பவே அப்பவே

பெண் :இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
ஆண் :இப்பவே இப்பவே பேசணும் இப்பவே

ஆண் :வெள்ளச் சேதம் வந்தால் கூட
தப்பிக் கொள்ளலாம்
உள்ளச் சேதம் வந்து விட்டால் என்ன செய்வது

பெண் :முள்ளைக் காலில் ஏற்றிக் கொண்டால்
ரத்தம் மட்டும் தான்
உன்னை நெஞ்சில் ஏற்றிக் கொண்டேன்
நித்தம் யுத்தம் தான்

ஆண் :சொல்லித் தீரா இன்பம் கண்டு
எந்தன் நெஞ்சு கூத்தாட‌
பெண் :மின்னல் கண்ட தாழை போல
உன்னால் நானும் பூத்தாட‌

ஆண் :உன்னைக் கண்டேன் என்னைக் காணோம்
என்னைக் காண உன்னை நானும்
பெண் :இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
இப்பவே இப்பவே பேசணும் இப்பவே

ஆண் :எந்தன் வாழ்வில் வந்ததின்று நல்ல திருப்பம் இனி
உந்தன் கையைப் பற்றிக் கொண்டே செல்ல விருப்பம்
பெண் :நெஞ்ச வயல் எங்கும் உன்னை நட்டு வைக்கிறேன்
நித்தம் அதில் காதல் உரம் இட்டு வைக்கிறேன்

ஆண் :உன்னைக் காண நானும் வந்தால்
சாலை எல்லாம் பூஞ்சோலை
பெண் :உன்னை நீங்கி போகும் நேரம்
சோலை கூட தார்ப்பாலை
ஆண் :மண்ணுக்குள்ளே வேரைப் போலே
நெஞ்சுக்குள்ளே நீதான் நீதான்

பெண் :இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
ஆண் :இப்பவே இப்பவே பேசணும் இப்பவே
பெண் :கண்ணுக்குள்ள உன்னைக் கண்ட அப்பவே அப்பவே
ஆண் :கைவளையல் ஓசை கேட்டால் அப்பவே அப்பவே
பெண் :ஆடை வாசம் நாசி தொட்ட அப்பவே அப்பவே
ஆயுள் கைதி ஆகிவிட்டேன் அப்பவே அப்பவே

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY