Laddu Laddu Rendu
Rajapattai
Hero Vikram
Music Director Yuvan shankar raja
Lyricist Yugabharathy
Singers Andrea,Suchitra,Vikram
Year 2011
Song Lyrics

ஆண் :ஹே லட்டு லட்டு ரெண்டு லட்டு
லட்டு லட்டு ரெண்டு லட்டு
சேர்ந்து கெடச்சாலே லக்கே லக்கே

பெண் :சுக்குனா சுக்கு மல்லி
சுந்தரினா டிகிரி காப்பி
சூடா கொதிக்கயிலே சோடா என்னத்துக்கு
எடுத்து குடிக்கவா தோஸ்து தோஸ்து
இதுக்கு எதுவும் இல்ல வாஸ்து வாஸ்து

குச்சினா குச்சி மிட்டாய் குமரினா பஞ்சு மிட்டாய்
பேஷா இருக்கையிலே பீஸ்சா என்னத்துக்கு
இந்தா எடுத்துக்கோ டேஸ்ட்டு டேஸ்ட்டு
இன்னும் தயங்குனா வேஸ்ட்டு வேஸ்ட்டு

ஆண் :லட்டு லட்டு ரெண்டு லட்டு
சேர்ந்து கெடச்சாலே லக்கே லக்கே
ஒட்டு ஒட்டு திக்கா ஒட்டு
வாரி அணைச்சாலே கிக்கு கிக்கு

பெண் :அட வடிவேல் கந்தனுக்கு ரெண்டு பேரு ஜோடி
அவங்க அப்பாவுக்கும் உள்ளதுதான் போடி
அடியே பொம்பளைக்கும் ரெண்டு வீடு தாண்டி
அதுல என்ன குத்தம் வாய பொத்திக்கோடி

ஆண் :ஏ காலு கை ரெண்டுனா தேவ தேவ
கட்டுனவ ரெண்டுனா பேஜாரு
வீடு வாசல் ரெண்டுனா ஓகே ஓகே
பொண்டாட்டிங்க ரெண்டு ஏன் நீ கூறு

பெண் :ஆசை மீறுனா அளவே இல்லயே
எதுக்கு போடுற வேலி வேலி
பாம்பு வேணுமா ஏணி வேணுமா
குலுக்கி போடவா சோழி சோழி

ஆண் :லட்டு லட்டு ரெண்டு லட்டு
சேர்ந்து கெடச்சாலே லக்கே லக்கே
ஒட்டு ஒட்டு திக்கா ஒட்டு
வாரி அணைச்சாலே கிக்கு கிக்கு

பெண் :பகலே இல்லையின்னா வந்திடுமா நைட்டு
கவல வேணாமுன்னா வச்சுக்கணும் சைட்டு
தவறே இல்லயின்னா ஒண்ணும் இல்ல ரைட்டு
ஜெயிக்க வேணுமுன்னா போடனுமே பைட்டு

ஆண் :சூரியன போல நான் ஒத்த ஆளு
வெண்ணிலவு ரெண்டுனா ஆகாதே
தாமரைக்கு தண்ணி தான் கூட்டு கூட்டு
தண்ணி வத்தி போச்சுனா தாங்காதே

பெண் :எதையும் தாங்குவேன் என்ன ஏத்துக்கோ
பூட்டுக்காகவே சாவி சாவி
கோரப் பாய் அவ இலவ பஞ்சிது
இழுக்க பாக்குறா கூவி கூவி

ஆண் :லட்டு லட்டு ரெண்டு லட்டு
சேர்ந்து கெடச்சாலே லக்கே லக்கே
ஒட்டு ஒட்டு திக்கா ஒட்டு
வாரி அணைச்சாலே கிக்கு கிக்கு
பபபபபபபப்ப்ப்பப்பா......

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY