
Hero | Vikram |
Music Director | Yuvan shankar raja |
Lyricist | Yugabharathy |
Singers | Haricharan |
Year | 2011 |
பொடி பையன் போலவே மனம் இன்று துள்ளுதே
அது உன்னை தேடி தேடி தேடி தேடி வந்ததே
அளவில்லா காதலை தரச்சொல்லி கெஞ்சுதே
தினம் உன்னை காணவே சொல்லுதே
சேட்டைகள் செய்யுதே
எங்கே நான் போனாலும் போகாமலே
காதல் பின்னாலே வருகின்றதே
சொல் பேச்சை கேட்காமல் எப்போதுமே
தொல்லை தன்னாலே தருகின்றதே
பொடி பையன் போலவே மனம் இன்று துள்ளுதே
அது உன்னை தேடி தேடி தேடி தேடி வந்ததே
அளவில்லா காதலை தரச்சொல்லி கெஞ்சுதே
தினம் உன்னை காணவே சொல்லுதே
சேட்டைகள் செய்யுதே
நடை வண்டி பின்னே ஓடும் ஒரு நாயாய்
காதல் எனக்குள்ளே ஓடக்கண்டேன் சில நாளாய்
என்னை உப்பு மூட்டை தூக்கும் முதல் ஆளாய்
காதல் சுமந்தெங்கும் போக கண்டேன் பகல் ராவாய்
அறிவில்லை என் மூளையில்
உண்மையே அது உண்மையே
அங்கே எப்போதுமே என் அன்பே நீதானே
எங்கே நான் போனாலும் போகாமலே
காதல் பின்னாலே வருகின்றதே
சொல் பேச்சை கேட்காமல் எப்போதுமே
தொல்லை தன்னாலே தருகின்றதே
உறங்காமல் பாடல் கேட்டேன்
எழும்போதே தேநீர் கேட்டேன்
இனிமேலே கேட்பேன் உன்னையே
நடந்தே நீ போகும்போது
நடைபாதை பூக்கள் யாவும்
உன்னை பார்த்து வைக்கும் கண்ணையே
மழை வந்தால் நிற்காமல் ஓடுவேன்
பயந்தோடுவேன் உள்ளே
நீ என்பதால் நான் நனையக்கூடாதே
எங்கே நான் போனாலும் போகாமலே
காதல் பின்னாலே வருகின்றதே
சொல் பேச்சை கேட்காமல் எப்போதுமே
தொல்லை தன்னாலே தருகின்றதே

COMPILED AND UPDATED BY