Paniye Pani Poove
Rajapattai
Hero Vikram
Music Director Yuvan shankar raja
Lyricist Yugabharathy
Singers Javid Ali,Renu
Year 2011
Song Lyrics

ஆண் :ஓ பனியே பனி பூவே மனமேனோ பறக்குதே
தலை கால் புரியாமல் உன்னை பார்த்து சாமி ஆடுதே
பெண் :உயிரே உயிர் தீவே அனல் போலே கொதிக்குதே
வெளியே தெரியாமல் உன்னை பார்த்து மூச்சு வாங்குதே

ஆண் :வேதாளம் போலே நீ வேலை செய்யாதே
எங்கெங்கோ தாவி என்னுள்ளே ஏறாதே
பெண் :கண்ணு அடிக்குதே நெஞ்சு வெடிக்குதே
ரத்தம் குடிக்குதே பேய் போல் காதல்

ஆண் :கத்தி தொலைக்குதே கன்னம் செவக்குதே
சுண்டி இழுக்குதே நோய் போல் காதல் ஓஹோ...

ஓ பனியே பனி பூவே மனமேனோ பறக்குதே
தலை கால் புரியாமல் உன்னை பார்த்து சாமி ஆடுதே
ஓஹோ ஹோ ஓ ஹோ ஹோ.....

ஆண் :ஏ கண்ணே நீ காணும் முன்னால்
கருங்கல்லாக வாழ்ந்தேனே
உன் பார்வை என்னை தீண்ட
எடை கல்லாக ஆனேனே

பெண் :ஓ ஓ அன்பே நீ பேசும் முன்னால்
சம மக்கான ஆள் நானே
உன் பேச்சை கேட்டப் பின்னால்
புது புக் ஆகிப் போனேனே

ஆண் :என்னை தெரியாமல்
இருந்தேனே முன்பு நான்
எல்லாம் தெளிவான ஒரு யோகி இன்று நான்
உன்னை நினைத்தாலே செல் எங்கும் விண்மீன்தான்

பெண் :கண்ணு அடிக்குதே நெஞ்சு வெடிக்குதே
ரத்தம் குடிக்குதே பேய் போல் காதல்
ஆண் :கத்தி தொலைக்குதே கன்னம் செவக்குதே
சுண்டி இழுக்குதே நோய் போல் காதல் ஓஹோ
பெண் :ஓ ஹோ ஹோ ஹோ

ஆண் :ஓஹோ முள் வேலிக்குள்ளே
வாடும் புல்லானேனே
அன்பே உன் அன்பில் நானே
தனி நாடாகி போவேனே

பெண் :பூமிக்கு ஈர்க்கும் சக்தி
அதை யாராரோ ஆராய்ந்தார்கள்
அன்பே உன் ஈர்ப்பை சொன்னேன்
பலர் அப்போவே சாய்ந்தார்கள்

ஆண் :கண்கள் எதற்காக அறிவோமே காரணம்
கைகள் எதற்காக அறிவோமே காரணம்
உள்ளம் கலந்தாலே அதற்கு இல்லை காரணம்

பெண் :கண்ணு அடிக்குதே நெஞ்சு வெடிக்குதே
ரத்தம் குடிக்குதே பேய் போல் காதல்
ஆண் :கத்தி தொலைக்குதே கன்னம் செவக்குதே
சுண்டி இழுக்குதே நோய் போல் காதல்
ஓஹோ ஓ ஹோ ஹோ ஹோ.....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY