
Hero | Ramarajan |
Music Director | Manoj Gyan Varma |
Lyricist | Vali |
Singers | Malasiya Vasudevan |
Year | 1987 |
பெரியநாயகி பெட்டிஷன் பெரியநாயகி
பெரியநாயகி பெட்டிஷன் பெரியநாயகி
ஊருக்காக உழைப்பா
ஒண்ணு நினச்சா அதை முடிப்பா
திருட்டுத்தனங்கள் நடந்தால்
அதை துணிஞ்சி அவ தடுப்பா
ஏதாச்சும் தப்புத்தண்டா எவனாச்சும் செய்யக் கண்டா
எதுக்கால வந்து நிப்பா எதிர்ப்பா நெருப்பா இருப்பா
ஊருக்காக உழைப்பா
ஒண்ணு நினச்சா அதை முடிப்பா
திருட்டுத்தனங்கள் நடந்தால்
அதை துணிஞ்சி அவ தடுப்பா
பங்களாவில் தானிருந்தும் பண்புடனே வாழ்வாளாம்
பல்லக்கு போல் காரிருந்தும் பல்லவனில் போவாளாம்
பொம்பளை மேல் மோதுகின்ற போக்கிரியைக் கண்டாலே
பெத்தெடுத்த தாய் போல புத்திமதி சொல்வாளே...
பேட்டையிலே குறைகளை கேப்பாளே
கொடிப் பறக்குற கோட்டையிலே மந்திரியை பார்ப்பாளே
நாள்தோறும் குப்பைகூளம் நடுவாலே சேரி சனம்
தாய்போல வாழும் விதம் இவதான் எழுதி கொடுப்பா
பெரியநாயகி பெட்டிஷன் பெரியநாயகி
கார்ப்பரேஷன் தண்ணி வர கால் கடுக்க காத்திருக்கும்
தாய்க்குலத்த பார்த்தாலே தாங்கிக் கொள்ள மாட்டாளே
போனெடுத்து பேசிடுவா பெண் புலிப் போல் சீறிடுவாள்
பொங்கி வரும் கங்கையைப் போல்
தண்ணிக் கொட்ட செஞ்சிடுவா
எளியோர்க்கு உழைச்சிட இவள் போல் யார்
துணை புரிவதில் பல பேர்க்கு இவளொரு எம்.ஜி.ஆர்.
ஊராரே சொந்தமின்னு உறவாடும் பந்தமின்னு
ரத்தத்தின் ரத்தமின்னு நெனைப்பா அதுபோல் நடப்பா
பெரியநாயகி பெட்டிஷன் பெரியநாயகி
எந்தக் கட ஆனாலும் எந்தப் பொருள் விற்றாலும்
தப்பு எடை போட்டாலே ஒப்புக்கொள்ள மாட்டாளே
நியாயவிலை என்னான்னு பட்டியலைக் கேட்பாளே
கண்ட விலை சொன்னாக்க கம்பி எண்ண வைப்பாளே
ஓயாது இவளது பொதுசேவை ஒரு பொழுதிலும்
சாயாது இவளது நேர்ப்பார்வை
தருமம்தான் பெண்ணானதோ தெய்வீகம் கண்ணானதோ
அடடா நான் என் சொல்வதோ இவளோர் புதுமை படைப்பு
பெரியநாயகி பெட்டிஷன் பெரியநாயகி
ஊருக்காக உழைப்பா
ஒண்ணு நினச்சா அதை முடிப்பா
திருட்டுத்தனங்கள் நடந்தால்
அதை துணிஞ்சி அவ தடுப்பா
ஏதாச்சும் தப்புத்தண்டா எவனாச்சும் செய்யக் கண்டா
எதுக்கால வந்து நிப்பா எதிர்ப்பா நெருப்பா இருப்பா
பெரியநாயகி பெட்டிஷன் பெரியநாயகி
பெரியநாயகி பெட்டிஷன் பெரியநாயகி.....

COMPILED AND UPDATED BY