Ivargal Indhiyargal
Ivargal Indiyargal
Hero Ramarajan
Music Director Manoj Gyan Varma
Lyricist Vali
Singers Malasiya Vasudevan,B.Sasireka
Year 1987
Song Lyrics

ஆண் : இவர்கள் இந்தியர்கள்
பெண் : இவர்கள் இந்தியர்கள்
ஆண் : இந்திய மண்ணின் பண்புக்கும் அன்புக்கும்
இலக்கணமாக இருப்பவர்கள்
பெண் : நல்ல இலக்கியமாக நிலைப்பவர்கள்
இருவரும் : இவர்கள் இந்தியர்கள்

ஆண் : தன் மகனாயினும் தவறுகள் புரிந்தால்
நன் மகன் அல்ல என நினைத்தார்
இந்த நல்லவன் பிள்ளையின் உயிர் பறித்தார்
வாய்க்கு உருசியாய் ஊட்டிய கையால்
வாய்க்கரிசி அள்ளிப் போட்டுவிட்டார்

பெண் : பாரினில் தர்மம் வாழ்ந்திட வேண்டி
பாசத்தை மண்ணில் புதைத்துவிட்டார்
இருவரும் : இவர்கள் இந்தியர்கள்.....
இவர்கள் இந்தியர்கள்......

ஆண் : நன்றி மறந்தவன் நடைப்பிணமென்று
இங்கொரு தந்தை விதி செய்தார்
மகன் இருந்தும் அவனுக்கு திதி செய்தார்
பெண் : விளக்கின் அடியில் இருட்டிருந்தாலும்
வெளிச்சம் கொடுக்கும் அனைவருக்கும்

ஆண் : அடுத்தவர் கண்ணீர் துடைப்பவர் வாழ்வும்
அதுபோல் இங்கே அமைந்திருக்கும்
இருவரும் : இவர்கள் இந்தியர்கள்
இவர்கள் இந்தியர்கள்......

ஆண் : கூட்டுக் குடும்பத்தின் பாரத்தை எல்லாம்
ஏற்றுக் கொண்டான் இந்த சுமைதாங்கி
அதை இமை போல் காத்தான் துயில் நீங்கி
பெண் : தன் கைப் பற்றி தாலி அணிந்த
நங்கையை கூட தொடவில்லை
ஆண் : நாயகன் போலே நாயகி அமைந்தாள்
பூமியில் இவர்க்கோர் இணையில்லை

ஆண் : இவர்கள் இந்தியர்கள்
பெண் : இவர்கள் இந்தியர்கள்
ஆண் : இந்திய மண்ணின் பண்புக்கும் அன்புக்கும்
இலக்கணமாக இருப்பவர்கள்
பெண் : நல்ல இலக்கியமாக நிலைப்பவர்கள்
இருவரும் : இவர்கள் இந்தியர்கள் இவர்கள் இந்தியர்கள்

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY