Manjakili Vanjikodi
Ivargal Indiyargal
Hero Ramarajan
Music Director Manoj Gyan Varma
Lyricist Vali
Singers Vani Jayaram,S.N.Surendar
Year 1987
Song Lyrics

பெண் : மஞ்சக்கிளி வஞ்சிக்கொடி
நெஞ்சைக் கிள்ளாதே
ஆண் : முன்னும் பின்னும் கிள்ளக்கிள்ள
மெல்லத் துள்ளாதே

பெண் : ஹோ மஞ்சக்கிளி வஞ்சிக்கொடி
நெஞ்சைக் கிள்ளாதே
ஆண் : ஆஹா முன்னும் பின்னும்
கிள்ளக் கிள்ள மெல்லத் துள்ளாதே

பெண் : நீரினில் ஆடும் தாமரைத் தண்டு
ஆண் : தாமரை மீது வாலிப வண்டு
பெண் : தேன் தரும் பாத்திரம் நான் துடிக்க
மஞ்சக்கிளி வஞ்சிக்கொடி நெஞ்சைக் கிள்ளாதே
ஆண் : முன்னும் பின்னும்
கிள்ளக் கிள்ள மெல்லத் துள்ளாதே

பெண் : மோகங்கள் ஆயிரம் மாமாங்கம்
தீராமல் வாழ்வது வாழ்வாகும்
ஆண் : ஆரம்பம் ஆனது ராஜாங்கம்
ஆசைகள்தான் அதன் பூர்வாங்கம்

பெண் : அம்மம்மா பூபாணம் பாயாதோ
ஆண் : அங்கங்கள் காயங்கள் ஆகாதோ
பெண் : ஆடையில் மேனியை நான் மறைக்க
ஆண் : ஆயினும் பூக்களை நான் பறிக்க

பெண் : மஞ்சக்கிளி வஞ்சிக்கொடி
நெஞ்சைக் கிள்ளாதே
ஆண் : முன்னும் பின்னும் கிள்ளக்கிள்ள
மெல்லத் துள்ளாதே

ஆண் : கைவீணை நீயென நான் மீட்ட
கல்யாணி மோஹனம் நான் காட்ட
பெண் : கச்சேரி வேளையில் பாராட்ட
கல்யாண மாலையை நான் சூட்ட

ஆண் : தெய்வீகம் வைபோகம் கூடாதா
பெண் : ஓ தேனாறும் பாலாறும் ஓடாதா
ஆண் : ஆலிலைப் போல் அதில் நான் மிதக்க
பெண் : ஆதியும் அந்தமும் நான் சிவக்க

பெண் : மஞ்சக்கிளி வஞ்சிக் கொடி
நெஞ்சைக் கிள்ளாதே
ஆண் : முன்னும் பின்னும்
கிள்ளக் கிள்ள மெல்லத் துள்ளாதே

பெண் : ஹோ மஞ்சக்கிளி வஞ்சிக் கொடி
நெஞ்சைக் கிள்ளாதே
ஆண் : ஹோ முன்னும் பின்னும்
கிள்ளக் கிள்ள மெல்லத் துள்ளாதே

பெண் : நீரினில் ஆடும் தாமரைத் தண்டு
ஆண் : தாமரை மீது வாலிப வண்டு
பெண் : தேன் தரும் பாத்திரம் நான் துடிக்க

பெண் : மஞ்சக்கிளி வஞ்சிக்கொடி நெஞ்சைக் கிள்ளாதே
ஆண் : முன்னும் பின்னும் கிள்ளக்கிள்ள மெல்லத் துள்ளாதே
இருவரும் : லாலா லாலா லாலா லாலா லாலா லலாலா

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY