
Hero | Aadhi |
Music Director | Ilayaraja |
Lyricist | Na. Muthukumar |
Singers | Ragul Nambiyar,Andrea Jeremiah |
Year | 2013 |
பெண் : சிக்கிமுக்கி சிக்கிமுக்கி மனசு
வத்திக்குச்சி வத்திக்குச்சி வயசு
சிக்கிமுக்கி சிக்கிமுக்கி மனசு
தொட்டு பத்திக்கிச்சி வத்திக்குச்சி வயசு
உன் கண்ணிலே ஓர் விலை அதில் நான் வீழும் வேளை
ஆனந்தமாய் துள்ளுவேன் விட வேண்டாமடா
எண்ணத்தில் என்னென்னவோ ஓர் சொகுசு
வலை விட்டுத்தான் துள்ளுதேன் கொலுசே
இதை என்னென்று சொல்லட்டும் எனக்கே புதுசு
கொடு கன்னத்தில் உன் பரிசை
சிக்கிமுக்கி சிக்கிமுக்கி மனசு
வத்திக்குச்சி வத்திக்குச்சி வயசு
சிக்கிமுக்கி சிக்கிமுக்கி மனசு
தொட்டு பத்திக்கிச்சி வத்திக்குச்சி வயசு
அருகினில் உன்னை மன அறையினில் வைத்தே
மகிழ்ந்திடுவேனே என் விழி உந்தன் வீடே
வரும் திசை பார்த்து மனம் தினம் படும்பாடே
எதிரில் நீ வந்தால் மனம் மலர்களின் காடே
சந்தனமும் குங்குமமும் சங்கமத்தில் விட்டுதே
தள்ளி நின்ற நெஞ்சம் ரெண்டும் ஒன்றுதான் வா
பொய்க்குள்ள சின்னம் மட்டும் கை குலுக்கி கொண்டதே
உன்னை என்னை உற்று உற்று பார்க்கலாம் வா
பொங்கிடும் காவேரிக்கு எல்லைகள் எங்குள்ளது
நெஞ்சுக்குள் சித்திரமாய் உன் உருவம்
நாளும் உள்ளுக்குள் பத்திரமாய் உலகம்
சிக்கிமுக்கி சிக்கிமுக்கி மனசு
வத்திக்குச்சி வத்திக்குச்சி வயசு
சிக்கிமுக்கி சிக்கிமுக்கி மனசு
தொட்டு பத்திக்கிச்சி வத்திக்குச்சி வயசு
ஆண் : உதடுகள் மேலே பசி வருவதை பார்த்தேன்
இதயமும் ஏனோ நடுநடுங்குது வேர்த்தேன்
சிறு பனிக்காற்று அது மலையினை சாய்த்தே
அதிசயம் செய்தால் காதல் நடந்திடும் கூத்தே
சட்டை பையில் சிக்கிக்கொண்டு வெண்ணிலவு துள்ளுது
எட்டிச் செல்ல என்ன வழி சொல்லு வா வா
கன்னக்குழி பள்ளத்துக்குள் என்ன தள்ள எண்ணுதே
தப்பி செல்ல விட்டிடுமா காதல் தான் வா
பொய் சொல்லும் கண்களுக்கு
மெய் சொல்லும் நெஞ்சமே இது
ஹே சத்தியம் சத்தியம் என் மனது
வாழ்வு இப்பவும் எப்பவுமே உனது
பெண் : சிக்கிமுக்கி சிக்கிமுக்கி மனசு
வத்திக்குச்சி வத்திக்குச்சி வயசு
சிக்கிமுக்கி சிக்கிமுக்கி மனசு
தொட்டு பத்திக்கிச்சி வத்திக்குச்சி வயசு
உன் கண்ணிலே ஓர் விலை அதில் நான் வீழும் வேளை
ஆனந்தமாய் துள்ளுவேன் விட வேண்டாமடா
எண்ணத்தில் என்னென்னவோ ஓர் சொகுசு
வலை விட்டுத்தான் துள்ளுதேன் கொலுசே
இதை என்னென்று சொல்லட்டும் எனக்கே புதுசு
கொடு கன்னத்தில் உன் பரிசை
சிக்கிமுக்கி சிக்கிமுக்கி மனசு
வத்திக்குச்சி வத்திக்குச்சி வயசு
சிக்கிமுக்கி சிக்கிமுக்கி மனசு
தொட்டு பத்திக்கிச்சி வத்திக்குச்சி வயசு

COMPILED AND UPDATED BY