Enna Petha Aaththannu
Karakattakari
Hero Roja
Music Director Ilayaraja
Lyricist Ilayaraja
Singers Ilayaraja
Year 2004
Song Lyrics

என்னப் பெத்த ஆத்தான்னு எசய எடுத்து பாத்தா
இருக்குறது ஒரே ஒரு மூக்காம்பா
இந்த அண்டத்த உண்டாக்கியதில்
மண்ணுருண்ட ஆக்கி உள்ளே
உனக்கும் எனக்கும் எடங்கொடுத்தா மூக்காம்பா

என்னப் பெத்த ஆத்தான்னு எசய எடுத்து பாத்தா
இருக்குறது ஒரே ஒரு மூக்காம்பா
இந்த அண்டத்த உண்டாக்கியதில்
மண்ணுருண்ட ஆக்கி உள்ளே
உனக்கும் எனக்கும் எடங்கொடுத்தா மூக்காம்பா

சின்னப் புத்தியுள்ள ஒரு
சின்னப் பையன் என்னையும்
சின்னப் புத்தியுள்ள ஒரு
சின்னப் பையன் என்னையும்
தன்னுடைய புள்ளையென்பா மூக்காம்பா

என்ன குத்தம் செய்தாலும்
மன்னிப்பு கருணையுண்டு
தன்னோட அணைச்சுக்குவா மூக்காம்பா

என்னப் பெத்த ஆத்தான்னு எசய எடுத்து பாத்தா
இருக்குறது ஒரே ஒரு மூக்காம்பா
இந்த அண்டத்த உண்டாக்கியதில்
மண்ணுருண்ட ஆக்கி உள்ளே
உனக்கும் எனக்கும் எடங்கொடுத்தா மூக்காம்பா

கம்ப்யூட்டர் காலமாச்சு காசதிகம் தேவையாச்சு
கண்ணு மண்ணு தெரியல்லையே
காடு மேடு அழிஞ்சு போச்சு
கட்டிடங்கள் அதிகமாச்சு
கஷ்டம் மட்டும் கொறையலையே ( 2 )

விவசாயம் நின்னு போச்சு
விதைகள் கூட கெட்டுப் போச்சு
விவசாயம் நின்னு போச்சு
விதைகள் கூட கெட்டுப் போச்சு

வேலையும் கெடைக்கவில்லையே
வீடெல்லாம் டிவியாச்சு
வீதியெல்லாம் குப்பையாச்சு
வேதனையும் தாளவில்லையே

படித்து படிப்புக்கொரு
வெலக் கொடுத்து வாங்குறான்
குடிக்கும் தண்ணியக் கூட
கூலி தந்து குடிக்கிறோம்

அடுப்படியில் அடுப்ப வச்சு
ஒலைய வச்சு பாக்குறோம்
துடிக்கும் இந்த மனசுக்குக்கென்ன
வெலக் கொடுக்கப் போகிறோம்

சொன்ன சொல்ல கேட்டுக்கடி மூக்காம்பா
இதுக்கென்ன மருந்தென்று சொல்லு மூக்காம்பா
சொன்ன சொல்ல கேட்டுக்கடி மூக்காம்பா
இதுக்கென்ன மருந்தென்று சொல்லு மூக்காம்பா

என்னப் பெத்த ஆத்தான்னு எசய எடுத்து பாத்தா
இருக்குறது ஒரே ஒரு மூக்காம்பா
இந்த அண்டத்த உண்டாக்கியதில்
மண்ணுருண்ட ஆக்கி உள்ளே
உனக்கும் எனக்கும் எடங்கொடுத்தா மூக்காம்பா

முன்னால சொல்லி வச்ச
உண்மையெல்லாம் சொல்லப் போனா
பழையக் கத என்று சொல்லும் இளவட்டமே
தந்தை தாய் இல்லாம தனக்குத்தானே பொறந்தாப்புல
தட்டுக்கெட்டு போகுதய்யா தரமட்டமே ( 2 )

போதி மரத்தடியில் புத்தனும் பொறந்து வந்து
போதி மரத்தடியில் புத்தனும் பொறந்து வந்து
புத்திமதி போதிச்சதும் போனதய்யா
சாதி மரத்தடியில் சாத்தான்கள் கூடி நின்று
சத்தியத்த கொண்டு சத்தம் போடுதய்யா

அமைதியென்று சொல்லிக் கொண்டு
ஆயுதங்கள் செய்யுறோம்
அடுத்த வீட்ட எட்டிப் பாத்து
அங்கலாய்ச்சு ஏங்குறோம்

எந்திரத்த கொண்டு இங்கு
மனுஷ உறவை வெட்டுறோம்
எங்க வயித்தனையும் ரிப்பேர் செஞ்சு கட்டுவோம்

மண்ணில் வாழ புடிக்கலையே மூக்காம்பா
எனக்குன்ன விட்டா யாருமில்ல மூக்காம்பா
மண்ணில் வாழ புடிக்கலையே மூக்காம்பா
எனக்குன்ன விட்டா யாருமில்ல மூக்காம்பா

என்னப் பெத்த ஆத்தான்னு எசய எடுத்து பாத்தா
இருக்குறது ஒரே ஒரு மூக்காம்பா
இந்த அண்டத்த உண்டாக்கியதில்
மண்ணுருண்ட ஆக்கி உள்ளே
உனக்கும் எனக்கும் எடங்கொடுத்தா மூக்காம்பா

சின்னப் புத்தியுள்ள ஒரு
சின்னப் பையன் என்னையும்
சின்னப் புத்தியுள்ள ஒரு
சின்னப் பையன் என்னையும்
தன்னுடைய புள்ளையென்பா மூக்காம்பா
என்ன குத்தம் செய்தாலும் மன்னிப்பு கருணையுண்டு
தன்னோட அணைச்சுக்குவா மூக்காம்பா

என்னப் பெத்த ஆத்தான்னு எசய எடுத்து பாத்தா
இருக்குறது ஒரே ஒரு மூக்காம்பா
இந்த அண்டத்த உண்டாக்கியதில்
மண்ணுருண்ட ஆக்கி உள்ளே
உனக்கும் எனக்கும் எடங்கொடுத்தா மூக்காம்பா....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY