
Hero | Jayaram |
Music Director | Ilayaraja |
Lyricist | Na. Muthukumar |
Singers | Shreya Ghoshal |
Year | 2003 |
எனக்கு பிடித்த பாடல் அது
உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவு அது
உன்னை பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து
தந்து நோயைக் கூட்டுமே
உதிர்வது பூக்களா.......
மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா......( எனக்கு )
மெல்ல நெருங்கிடும் போது
நீ தூரப் போகிறாய்
விட்டு விலகிடும் போது
நீ நெருங்கி வருகிறாய்
காதலின் திருவிழா
கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே
இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன்
மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர்
காத்தாடி ஆகிறேன் ( எனக்கு )
வெள்ளிக் கம்பிகளைப்போலே
ஒரு தூறல் போடுதோ
விண்ணும் மண்ணில் வந்து சேர
அது பாலம் போடுதோ
நீர்த்துளி தீண்டினால் நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம்
வீணையின் தேன் ஸ்வரம்
ஆயிரம் பிறவியாய் அன்பிலே நனைக்கிறாய்
வேதம் போல எனக்குள்ளே
மோகம் வளர்த்து கலைக்கிறாய் (எனக்கு )

COMPILED AND UPDATED BY