Enakku Piditha Paadal (duet )
Julie Ganapathy
Hero Jayaram
Music Director Ilayaraja
Lyricist Na. Muthukumar
Singers Shreya Ghoshal,K.J.Jesudass
Year 2003
Song Lyrics

பெண் :எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
ஆண் :என்னை பிடித்த நிலவு அது உன்னை பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே

ஆண் :உதிர்வது பூக்களா....
பெண் :மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா
மெல்ல நெருங்கிடும் போது நீ தூர போகிறாய்
விட்டு விலகிடும் போது நீ நெருங்கி வருகிறாய்

ஆண் :காதலின் திருவிழா கண்களில் நடக்குதே
குழந்தையை போலவே இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன் மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர் காத்தாடி ஆகிறேன்

ஆண் :எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
என்னை பிடித்த நிலவு அது உன்னை பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே

ஆண் :உதிர்வது பூக்களா.....மனது வளர்த்த
சோலையில் காதல் பூக்கள் உதிருமா
பித்து பிடித்ததை போலே அடி பேச்சு குளறுதே
வண்டு குடைவதை போலே விழி மனசை குடையுதே

பெண் :காதலின் திருவிழா கண்களில் நடக்குதே
குழந்தையை போலவே இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன் மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர் காத்தாடி ஆகிறேன்

பெண் :எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
என்னை பிடித்த நிலவு அது உன்னை பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே

பெண் :வெள்ளிக் கம்பிகளைப் போல ஒரு தூறல் போடுதோ
விண்ணும் மண்ணில் வந்து சேர அது பாலம் போடுதோ

ஆண் :நீர்த்துளி நீங்கினால் நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம் வீணையின் தேன் ஸ்வரம்
ஆயிரம் அருவியாய் அன்பிலே நனைக்கிறாய்
மேகம் போல எனக்குள்ளே மோகம் வளர்த்து கலைகிறாய்

பெண் :எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
என்னை பிடித்த நிலவு அது உன்னை பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே

ஆண் :உதிர்வது பூக்களா.....
மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா
எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY