Ennai Enna Seithai
Song Lyrics

பெண் :என்னை என்ன செய்தாய் வேங்குழலே
என்னை என்ன செய்தாய் வேங்குழலே

என்னை என்ன செய்தாய் வேங்குழலே
எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லயே
எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லயே
நாளும் சுக நாதம் தந்து அனல் மெழுகாய்
இந்த இள மனம் இளகிடவே
என்னை என்ன செய்தாய் வேங்குழலே..ஏ..ஏ...

என்றும் இசை வேள்வி நடத்துகின்றேன்….ஏ..ஏ...
என்றும் இசை வேள்வி நடத்துகின்றேன்
என்றும் இசை வேள்வி நடத்துகின்றேன்
என்னுள் என்னை கண்டு நல்லின்பம் படைத்து நின்றேன்

என்றும் இசை வேள்வி நடத்துகின்றேன்
என்னுள் என்னை கண்டு நல்லின்பம் படைத்து நின்றேன்
வேறு ஞாபகங்கள் வருடாமல் நானிருந்தேன்
வேறு ஞாபகங்கள் வருடாமல் நானிருந்தேன்

யாரோ அவன் யாரோ யாரோ அவன் யாரோ
யமுனா நதி தீரத்தில் அமர்ந்தொரு இசை கலையால்
என்னை என்ன செய்தாய் வேங்குழலே
என்னை என்ன செய்தாய் வேங்குழலே

ஆண் :மழை கம்பி குத்தாமல் இருக்க
குடை கம்பியாய் ஒதுங்கினேன்
குடையல்ல அது உன் குரல் அருவி குற்றாலம்
பெண் :ரி க ரிக நிஸரி நிஸரி த த நி ரீரீ
ச நி த ப த ச நி ச ரி நி நி ச க ரி
ஆண் :கானம் கேட்க கண் மூட போய்
காணாமலே போனேன் நான்
காக ரிகாக ஸாநீநி ஸரீரி பமாம தநீநி

விட்டுக் கூடு பாய்ந்திருப்பேனோ என
தட்டு தடுமாறி தேடி
காதுகளால் இரைந்து கிடக்கும்
உன் காலடிவாரம் வந்தடைந்தேன்

பெண் :மூங்கில் போலே
விளைந்தொரு மங்கை இருக்க
ஆண் :அடடா தாளமிடும் கைக்கும்
தட்டுப்படும் உன் தொடைக்கும் இடையே நான்
சிக்கிக் கொண்டிருப்பதை கண்டுகொண்டேன்

பெண் :மூங்கில் போலே
விளைந்தொரு மங்கை இருக்க
துளைக்கும் வண்டாய் மனதை துளைத்தாய் நீயே
ஆண் :ஏதோ காது கொடுக்க வந்தவன்
வெறும் காதோடு மட்டுமே போகிறேன் போ

பெண் :தூங்கும் யாழாய்
தனிமையில் தோகை இருக்க
மீட்டும் விரலாய் நரம்பினில் நடந்தாய் நீயே
வண்ண மலர் உண்டு வெள்ளி அலை உண்டு
வருடிடும் காற்றென உலவ போ

வண்ண மலர் உண்டு வெள்ளி அலை உண்டு
வருடிடும் காற்றென உலவ போ
பச்சை கொடியுண்டு பசும் புல் மடியுண்டு
நீர் துளியை போல தழுவ போ

இசைகள் நுழையாத செவிகள் பல உண்டு
உனது திறமைகள் அங்கு பலிக்குமோ
நீயும் விளையாட நூறு இடம் உண்டு
அனுதினம் வருத்துதல் நியாயமோ

என்னை என்ன செய்தாய் வேங்குழலே
எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லயே
நாளும் சுக நாதம் தந்து அனல் மெழுகாய்
இந்த இள மனம் இளகிடவே
எ வேங்குழலே வேங்குழலே.....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY