Appadi Pakkurathunna
Ivan
Hero R.Parthiban
Music Director Ilayaraja
Lyricist Palani Bharathi
Singers Unni Krishnan,Mathangi
Year 2002
Song Lyrics

பெண் :தன்ன தாக்குருதின்னா னான்னா
தந்தான தாக்குருதின் தா னா

அப்படி பாக்குறதுன்னா வேணா
கண் மேலே தாக்குறது வேணாம்
தத்தித் தாவுறதுன்னா நானா
தள்ளாடும் ஆசைகள் தானா

என்னைக் கேட்காமல் கண்கள் செல்ல
உன் பக்கம் பார்த்தேன்
மிச்சம் இல்லாம வெட்கம் தின்ன
காணாமல் போனேன்
தில்தில் ரூபா ரூபா என்ன மந்திரம் பண்ண
புல்புல் தாரா தாரா என்ன தந்திரம் பண்ண

அப்படி பாக்குறதுன்னா வேணா
கண் மேலே தாக்குறது வேணாம்
தத்தித் தாவுறதுன்னா நானா
தள்ளாடும் ஆசைகள் தானா

தும் சக் தும் சக்கு தும் சக் தும் சக்கு
ஆண் :தும் ச்சே தும் ச்சே ச ச்சே
தும் ச்சே தும் ச்சே ச ச்சே
பெண் :ஹஹஹ்ஹஹா

பெண் :தொட்டுத் தொட்டு எனைப் பார்த்து
தட்டித் தட்டி சுதி சேர்த்தாயே
எட்டுக் கட்டை உச்ச ஸ்தாயில்
மெட்டுக் கட்டி ஜதி போட்டாயே

ஆதி தாளம் போட்டு எனை
பாதியாக செய்து தத்தளிக்க விட்டாயே
நெஞ்சிளமை மின்ன தண்ணிக்குள் செய்யும்
சாதகங்கள் செய்தாயே
கல்யாணி நான் பாட கரகோஷம் கொட்டாதே
கண்ணா உன் முன்னாலே தாளத்தில் தப்பாச்சே

அப்படி பாக்குறதுன்னா வேணா
கண் மேலே தாக்குறது வேணா
தத்தித் தாவுறதுன்னா னானா
தள்ளாடும் ஆசைகள் தானா

ஆண் :சுற்றிச் சுழன்றிடும் கண்ணில்
இசைத் தட்டு ரெண்டு பார்த்தேனே
பற்றி இழுத்தென்னை அள்ளும்
கன்னக் குழிகளில் வீழ்ந்தேனே

ரெண்டு இதழ் மட்டும் கொண்டிருக்கும்
உந்தன் புத்தகத்தில் அச்சானேன்
கண்டவுடன் தாவும் கண்ட படி கவ்வும்
உன்னிடத்தில் பித்தானேன்

மின்சார சிற்பத்தை கொஞ்சம்
கை தீண்டிப் பார்த்தேனே
பேரின்ப வெள்ளத்தில்
நான் மூழ்கிப் போனேனே

அப்படி பாக்குறதுன்னா வேணா
கண்ணால தாக்குறது வேணா
தன்ன தாக்குருதின்ன னா னா
தந்தான தாக்குருதின் தானா

பெண் :என்னைக் கேட்காமல் கண்கள் செல்ல
உன் பக்கம் பார்த்தேன்
மிச்சம் இல்லாம வெட்கம் தின்ன
காணாம போனேன்
தில்தில் ரூபா ரூபா என்ன மந்திரம் பண்ண
புல்புல் தாரா தாரா என்ன தந்திரம் பண்ண

அப்படி பாக்குறதுன்னா வேணா
கண் மேலே தாக்குறது வேணா….

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY