Panam Mattum Vazhkkaiya
Solla Marandha Kadhai
Hero Cheran
Music Director Ilayaraja
Lyricist Ilayaraja
Singers Ilayaraja
Year 2002
Song Lyrics

பணம் மட்டும் வாழ்க்கையா
இந்தப் பாழாப் போன மனுஷனுக்கு
பணம் மட்டும் வாழ்க்கையா
இந்தப் பாழாப் போன மனுஷனுக்கு

பணம் மட்டும் வாழ்க்கையா
இந்தப் பாழாப் போன மனுஷனுக்கு
பணம் என்றால் கதவெல்லாம் தெறக்குது
கனவிலே மிதக்குது பறக்குது
மனசுதான் தெரு நாயா எங்கோ அலையுது

பணம் மட்டும் வாழ்க்கையா
இந்தப் பாழாப் போன மனுஷனுக்கு
பணம் மட்டும் வாழ்க்கையா
இந்தப் பாழாப் போன மனுஷனுக்கு

மிருகம் வந்து மனுஷ மனசிலே
உள்ள நொழஞ்சு ஓட்டி ஆட்டுது
உருட்டும் பொரட்டும் கூடச் சேரவே
குருட்டு உலகில் குடும்பம் நடத்துது

வெல கொடுத்து பொருள வாங்கி
வீட்டுக்குள்ளே கூட்டலாம்
வாழ்க்கைக்கென்ன வெல கொடுப்ப
நீயும் சொல்லு பாக்கலாம்

பாசம் எல்லாம் மனுஷனுக்கு
பணத்து மேல போகுது
பாழடைஞ்ச அரண்மனையா
பாவி நெஞ்சு மாறுது
எழந்ததும் புரியல வழி எதும் தெரியல

பணம் மட்டும் வாழ்க்கையா
இந்தப் பாழாப் போன மனுஷனுக்கு
பணம் மட்டும் வாழ்க்கையா
இந்தப் பாழாப் போன மனுஷனுக்கு

மனதில் நல்ல மனிதன் நீ என்றால்
மாடி வீடும் உள்ளே அழைக்குமே
மானத்தோடு இருக்க நினைப்பதால்
மதித்திடாது வெளியில் துரத்துமே

உலகம் ரொம்ப விரிஞ்சிருக்கு
உனக்கு இடம் இல்லையா
உன் எடத்த எவன் எடுப்பான்
உறுதி உனக்கு இல்லையா

ஏர் முனையால் காயம் பட்டால்
எந்த நிலம் அழுகுது
உழுவதெல்லாம் வெளச்சலுக்கு
உனக்கு நல்ல படிப்பிது
உழவு தான் நடந்தது
வெளைச்சல்தான் இருக்குது

பணம் மட்டும் வாழ்க்கையா
இந்தப் பாழாப் போன மனுஷனுக்கு
பணம் மட்டும் வாழ்க்கையா
இந்தப் பாழாப் போன மனுஷனுக்கு

பணம் என்றால் கதவெல்லாம் தெறக்குது
கனவிலே மிதக்குது பறக்குது
மனசு தான் தெரு நாயா எங்கோ அலையுது

பணம் மட்டும் வாழ்க்கையா
இந்தப் பாழாப் போன மனுஷனுக்கு
பணம் மட்டும் வாழ்க்கையா
இந்தப் பாழாப் போன மனுஷனுக்கு

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY