Adi Poonguyile poonguyile
Kummi Paattu
Hero Prabhu
Music Director Ilayaraja
Lyricist Kasthuri Raja
Singers Ilayaraja
Year 1999
Song Lyrics

பூங்குயிலே பூங்குயிலே கத சொல்லவா
சொல்லாத சேதியெல்லாம் சொல்லி விடவா
ஏத்தி வச்ச பாரங்கள எறக்கி வைக்க வேணுமடி
எங்கவல உனக்கு புரியுமா சொல்லம்மா

ஆராரோ ஆரிரரோ ஆராரிரோ
ஆராரோ ஆரிரரோ ஆராரிரோ.....
பூங்குயிலே பூங்குயிலே கத சொல்லவா
சொல்லாத சேதியெல்லாம் சொல்லி விடவா

முத்துமணி பவளமுன்னு
கொஞ்சிக் கொஞ்சி வளர்த்த மகன்
வேதனையில் வாடலாகுமோ ஓஓஒ
செல்ல செல்லப் பிள்ளையின்னு
சொல்லி சொல்லி வளர்த்த மகன்
சொந்தமின்றி வாழலாகுமோ ஓஓஒ

தாய் மடியில் வந்த சுகம் தாயோடு போனதம்மா
வேறு வழி வந்த சொந்தம் வெறுங்கதை ஆனதம்மா
தாய் கொடுத்த அன்பின் வரம் யார் தருவார்
என் தாய் மறைந்த துன்பத்தத்தான் யார் குறைப்பார்

அட தாய் தந்த பாசத்த ஈடு செய்ய யாருமில்லையே
பூங்குயிலே பூங்குயிலே கத சொல்லவா
சொல்லாத சேதியெல்லாம் சொல்லி விடவா

ஏர் உழுது போட்ட மண்ணு நீரு வர காஞ்சதுபோல்
தை அன்புக்கு ஏங்குறேனடி...
ஊருவலமாக வந்து தாயெறிஞ்ச தீயிக்குள்ளே
என் மனசு சாம்பலாச்சுடி...

வந்த வழி மட்டும் சுத்தம் வாழ்ந்த வழி எல்லாம் குத்தம்
தாயிருந்து வளர்த்திருந்தா ஏதம்மா இந்த யுத்தம்
நான் நடந்த பாதையெல்லாம் காட்டு முள்ளு
நான் ஊர் பழிய வாங்கும் சுமைதாங்கி கல்லு
அட நல்லது கெட்டது ஞாயத்த சாமிய கேட்டு சொல்லு

பூங்குயிலே பூங்குயிலே கத சொல்லவா
சொல்லாத சேதியெல்லாம் சொல்லி விடவா
ஏத்தி வச்ச பாரங்கள எறக்கி வைக்க வேணுமடி
எங்கவல உனக்கு புரியுமா சொல்லம்மா

ஆராரோ ஆரிரரோ ஆராரிரோ
ஆராரோ ஆரிரரோ ஆராரிரோ.....
பூங்குயிலே பூங்குயிலே கத சொல்லவா
சொல்லாத சேதியெல்லாம் சொல்லி விடவா.....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY