Chinna Manasu Manasu
Kummi Paattu
Hero Prabhu
Music Director Ilayaraja
Lyricist Kasthuri Raja
Singers Bhavadarini
Year 1999
Song Lyrics

பெண் : சின்ன மனசு மனசு உன்ன
நெனச்சு நெனச்சுத்தான் காத்திருக்க...

பெண்: சின்ன மனசு மனசு உன்ன
நெனச்சு நெனச்சுத்தான் காத்திருக்க
குழு : உன்ன நெனச்சு நெனச்சுத்தான் காத்திருக்க
பெண் : ஆஹாங் நித்தம் விடிஞ்சி விடிஞ்சி
உன் மொகத்த பாக்கத்தான் தவம் கிடக்க
குழு : உன் மொகத்த பாக்கத்தான் தவம் கிடக்க

பெண் : கல்யாண ஆச உண்டாச்சு உண்டாச்சு
கண் தூங்கி நானும் நாளாச்சு நாளாச்சு
உன் பார்வை தேடித் தேடி
நானும் கண்ண வச்சேன்

பெண்: சின்ன மனசு மனசு உன்ன
நெனச்சு நெனச்சுத்தான் காத்திருக்க
குழு : உன்ன நெனச்சு நெனச்சுத்தான் காத்திருக்க
பெண் : ஆஹாங் நித்தம் விடிஞ்சி விடிஞ்சி
உன் மொகத்த பாக்கத்தான் தவம் கிடக்க
குழு : உன் மொகத்த பாக்கத்தான் தவம் கிடக்க

பெண் : பூத்து சமஞ்சு வருஷம் அஞ்சு ஆயிருச்சு
குழு : அப்புறம் ஹாங் ஹாங் ஹாங்....
பெண் : எஞ்சோட்டு பொண்ணுக வாக்கப்பட்டு போயிருச்சு
குழு : ஹாய் ஹாய் ஹஹை ஹஹஹை

குழு : பொண்ணுக்கு இப்ப மாமன் மயக்கம் ஆயிருச்சு
மாலையை போட்டு சேரருற ஆச தோணிருச்சு
பெண் : ஹே...அவரோட பேச மனசெல்லாம் பூச
பயமாகி நானும் தனியாளா போக
முன்ன வந்து நின்னானே ஏதோ சொன்னானே
ஆத்தி ராத்திரி முழுக்கா தூக்கம் போச்சே ஹாஹா...

பெண்: சின்ன மனசு மனசு உன்ன
நெனச்சு நெனச்சுத்தான் காத்திருக்க
குழு : உன்ன நெனச்சு நெனச்சுத்தான் காத்திருக்க
பெண் : ஹேஹே நித்தம் விடிஞ்சி விடிஞ்சி
உன் மொகத்த பாக்கத்தான் தவம் கிடக்க
குழு : உன் மொகத்த பாக்கத்தான் தவம் கிடக்க

குழு : கல்யாண பந்தல போடத்தான் போறே
கச்சேரி கிச்சேரி வைக்கத்தான் போறே
பொண்ணு மாப்பிளையை கடத்திட்டு போவோம்
உருட்டி மெரட்டி திருட்டுத் தாலி
கட்டி வைக்க போறோம்

குழு : ராத்திரி ராத்திரி கத ஒண்ணு இருக்குது
படிக்கணும் படிக்கணும் விஷயம்
புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ ஹஹா
கொக்கரக்கோ கொக்கரக்கோ கொக்கரகக்ககோ..

பெண் : வெதைக்கிற காலத்தில் வெதைக்காவிட்டால்
வெளச்சலும் எங்கிருக்கு ஆங்..ஆங்..ஹாஹா...
ஹே..காலாகாலத்தில் கட்டிக்கலேன்னா
வாழ்க்கை எதுக்கிருக்கு ஹாய்..ஹாய்...ஹஹாய்...

குழு : ஆத்துல மேட்டுல காதலில் சேர்ந்து
பத்திரம் எழுதி கொடு
ஆவணி மாசம் கைப்பிடிப்பேன்னு
சத்தியம் பண்ணிக் கொடு

பெண் : ஹே வெலவாசி போல கொறையில என்னாச
உள்ளிருக்கும் ஆச சொல்லுது உன் மீச
பொண்ணு கேக்க வாயால பூவோ பொட்டோ கேட்டேனே
சொன்னா ஆச தீராதய்யா மாமா என் மாமா ஹோய்....

குழு: சின்ன மனசு மனசு உன்ன
நெனச்சு நெனச்சுத்தான் காத்திருக்க
பெண் : உன்ன நெனச்சு நெனச்சுத்தான் காத்திருக்க
குழு : ஆஹாங் நித்தம் விடிஞ்சி விடிஞ்சி
உன் மொகத்த பாக்கத்தான் தவம் கிடக்க
பெண் : உன் மொகத்த பாக்கத்தான் தவம் கிடக்க

பெண் : கல்யாண ஆச உண்டாச்சு உண்டாச்சு
கண் தூங்கி நானும் நாளாச்சு நாளாச்சு
உன் பார்வை தேடித் தேடி
நானும் கண்ண வச்சேன்

பெண்: சின்ன மனசு மனசு உன்ன
நெனச்சு நெனச்சுத்தான் காத்திருக்க
குழு : உன்ன நெனச்சு நெனச்சுத்தான் காத்திருக்க
பெண் : ஆஹாங் நித்தம் விடிஞ்சி விடிஞ்சி
உன் மொகத்த பாக்கத்தான் தவம் கிடக்க
குழு : உன் மொகத்த பாக்கத்தான் தவம் கிடக்க...!

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY